உலகின் சிறந்த வீரர் ரஸல்: பில் சால்ட்
உலகின் சிறந்த வீரர் ஆண்ட்ரே ரஸல் என கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பில் சால்ட் தெரிவித்துள்ளார்.
உலகின் சிறந்த வீரர் ஆண்ட்ரே ரஸல் என கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பில் சால்ட் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத்தை 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் த்ரில் வெற்றியைப் பதிவு செய்தது. இந்தப் போட்டியில் கொல்கத்தா அணியின் டாப் ஆர்டர்கள் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்த, ஆண்ட்ரே ரஸல் அணியை சரிவிலிருந்து மீட்டார். சிக்ஸர் மழை பொழிந்த ரஸல் 25 பந்துகளில் 64 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 7 சிக்ஸர்கள் மற்றும் 3 பவுண்டரிகள் அடங்கும்.
இந்த நிலையில், உலகின் சிறந்த வீரர் ஆண்ட்ரே ரஸல் என கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பில் சால்ட் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு பில் சால்ட் பேசியதாவது: த ஹண்ட்ரட் தொடரில் ஆண்ட்ரே ரஸலுடன் இணைந்து விளையாடியுள்ளேன். அவர் பந்துகளை சிறப்பாக எதிர்கொண்டு விளையாடக் கூடியவர். அவரது நாளில் அவர் உலகின் சிறந்த வீரராக இருப்பார். அவர் விளையாடியது நம்ப முடியாத விதமாக இருந்தது. ஆனால், அவரது இந்த ஆட்டம் எனக்கு ஆச்சரியத்தை அளிக்கவில்லை. மைதானத்தில் உள்ளவர்களுக்கும் இது ஆச்சரியத்தை கொடுத்திருக்காது என நினைக்கிறேன். அவர் இதுபோன்ற நம்பமுடியாத அளவிலான ஆட்டத்தை வழக்கமாக வெளிப்படுத்தக் கூடியவர் என்றார்.
ஐபிஎல் தொடரில் கேகேஆர் அணியில் அறிமுக வீரராக பில் சால்ட் நேற்று களம் கண்டது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.