ஹார்திக் பாண்டியா படம் | மும்பை இந்தியன்ஸ் (எக்ஸ்)
ஐபிஎல்

எந்த முடிவையும் ஹார்திக் தன்னிச்சையாக எடுக்கவில்லை: பேட்டிங் பயிற்சியாளர்

ஹார்திக் பாண்டியா தன்னிச்சையாக எந்த ஒரு முடிவையும் எடுக்கவில்லை.

DIN

ஹார்திக் பாண்டியா தன்னிச்சையாக எந்த ஒரு முடிவையும் எடுக்கவில்லையென மும்பை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் கிரன் பொல்லார்டு தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் நேற்றையப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் 6 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது. வெற்றி பெறும் நிலையில் இருந்தபோதிலும், மும்பை இந்தியன்ஸ் தோல்வியைத் தழுவியது விமர்சனத்துக்குள்ளானது.

இந்த நிலையில், ஹார்திக் பாண்டியா தன்னிச்சையாக எந்த ஒரு முடிவையும் எடுக்கவில்லையென மும்பை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் கிரன் பொல்லார்டு தெரிவித்துள்ளார்.

கிரன் பொல்லார்டு

இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: நீங்கள் ஒரு அணியாக என்ன செய்யப் போகிறீர்கள் என்பதை திட்டமிட்டு முடிவெடுக்க வேண்டும். கடந்த இரண்டு ஆண்டுகளாக குஜராத் அணிக்காக ஹார்திக் பாண்டியா புதிய பந்தில் பந்து வீசியுள்ளார். அவர் ஆட்டத்தின் முதல் ஓவரை வீசியதில் புதிதாக பார்ப்பதற்கு ஒன்றுமில்லை. அவர் நன்றாகவே பந்துவீசினார்.

7-வது வீரராக களமிறங்கியது ஹார்திக் பாண்டியாவின் தன்னிச்சையான முடிவு கிடையாது. ஒரு அணியாக எங்களுக்கென திட்டம் உள்ளது. வீரர்கள் எப்போது களமிறங்க வேண்டும் என்பதை நாங்கள் திட்டமிட்டிருந்தோம். எங்களது திட்டத்தை குஜராத் டைட்டன்ஸுக்கு எதிராக சரியாக செயல்படுத்த தவறினோம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடற்கரையில் ஆண் சடலம்

100 நாள் வேலை திட்டத்தை முறையாக செயல்படுத்த கோரி ஆட்சியரிடம் மனு

விடுபட்ட மகளிருக்கு டிசம்பா் முதல் உரிமைத் தொகை: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

கடலில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்துக்கு நிவாரண உதவி

அரசு மருத்துவமனையில் 5 மணி நேரம் மின் தடை: நோயாளிகள் கடும் அவதி

SCROLL FOR NEXT