முகப்பு
ஐபிஎல்

7 போட்டிகளிலும் சொந்த மண்ணில் விளையாடிய அணிகளே வெற்றி: மும்பை மீண்டும் தோற்குமா?

ஐபிஎல் 2024 தொடரின் முதல் 7 போட்டிகளும் சொந்த மண்ணில் விளையாடிய அணிகளே வெற்றி பெற்றுள்ளது.

Updated On : 27 மார்ச், 2024 at 12:25 PM
பகிர்:

ஐபிஎல் 2024 தொடரின் முதல் 7 போட்டிகளும் சொந்த மண்ணில் விளையாடிய அணிகளே வெற்றி பெற்றுள்ளது.

கடந்த மார்ச்.22ஆம் நாள் தொடங்கிய ஐபிஎல் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இன்றுவரை 7 போட்டிகளில் நடந்து முடிந்துள்ளன. இதில் விளையாடிய 7 போட்டிகளிலும் சொந்த மண்ணில் (ஹோம் கிரௌவுண்ட் அட்வான்டேஜ்) விளையாடிய அணிகளே வெற்றி பெற்றுள்ளது.

1வது போட்டி - சென்னையில் - சிஎஸ்கே

2வது போட்டி- சண்டிகரில் - பஞ்சாப்

3வது போட்டி- கொல்கத்தாவில்- கேகேஆர்

4வது போட்டி- ஜெய்பூரில் - ராஜஸ்தான்

5வது போட்டி- அஹமதாபாத் - குஜராத்

6வது போட்டி- பெங்களூரு - ஆர்சிபி

7வது போட்டி - சென்னை- சிஎஸ்கே

இந்நிலையில் இன்று இரவு 7.30 மணிக்கு ராஜீவ் காந்தி தேசிய மைதானம், ஹைதராபாத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மும்பை அணியுடன் மோதுகிறது. சொந்த மண்ணில் நடைபெறும் இப்போட்டியில் மும்பையை வீழ்த்துமா என ஹைதராபாத் ரசிகர்கள் ஆர்வமுடன் இருக்கிறார்கள்.

5 முறை சாம்பியன் பட்டம் வெற்ற மும்பை முதல் வெற்றியை பெறுமா என மும்பை ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

முழு கட்டுரையைப் படிக்க →