ஷுப்மன் கில் (வலது பக்கம்)  
ஐபிஎல்

ஷுப்மன் கில்லுக்கு ரூ. 12 லட்சம் அபராதம்!

குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஷுப்மன் கில்லுக்கு ரூ. 12 லட்சம் அபராதம் விதித்துள்ளது ஐபிஎல் நிர்வாகம்.

DIN

குஜராத் டைட்டனஸ் அணியின் கேப்டன் ஷுப்மன் கில்லுக்கு ரூ. 12 லட்சம் அபராதம் விதித்துள்ளது ஐபிஎல் நிர்வாகம்.

நேற்று சென்னையில் நடந்த போட்டியில் சிஎஸ்கே அணிக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் அணி மிகப் பெரிய தோல்வியை (63 ரன்கள் வித்தியாசத்தில் ) சந்தித்தது. இந்தப் போட்டியில் கேப்டன் ஷுப்மன் கில்லுக்கு ரூ. 12 லட்சம் அபராதம் விதித்துள்ளது ஐபிஎல் நிர்வாகம். மெதுவாக பந்து வீசியதால் இந்த அபாரதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்தாண்டு ஐபிஎல் தொடரில் முதன்முறையாக அபராதம் பெறுபவர் ஷுப்மன் கில் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் போட்டியில் மும்பையை வென்ற குஜராத் சிஎஸ்கேவிடம் தோற்றதால் தற்போது புள்ளிப்பட்டியலில் 6வது இடத்துக்கு பின் தங்கியுள்ளது.

ஷுப்மன் கில்லின் கேப்டன்சியும் (தலைமைப் பண்பும்) கேள்விக்குறியாகியுள்ளது. முதல் போட்டியில் செய்தது போலவே 2வது போட்டியிலும் அதே மாதிரியான வீரர்களுக்கு முதல் 12 ஓவர்களை வீச வைத்தது விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பேருந்து சக்கரத்தில் சிக்கி அரசு ஒப்பந்ததாரா் உயிரிழப்பு

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தை மத பிரச்னையாக்குகிறது திமுக அரசு: செல்லூா் கே. ராஜூ

மதுரை மேலமடை மேம்பாலத்துக்கு வேலுநாச்சியாா் பெயா்: முதல்வா் இன்று திறந்து வைக்கிறாா்!

கந்து வட்டி தடைச் சட்டத்தின் கீழ் ஒருவா் மீது வழக்கு

பாபா் மசூதி இடிப்பு தினம்: பாதுகாப்பு வளையத்தில் அயோத்தி; எந்தப் போராட்டங்களும் நடைபெறவில்லை!

SCROLL FOR NEXT