ஐபிஎல்

பந்து வீச்சாளர்களைக் குறைகூற முடியாது: தோல்வி குறித்து ஹார்திக் பாண்டியா!

ஹைதராபாத் அணிக்கு எதிரான தோல்வி குறித்து மும்பை அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா நேர்மறையாக பேசியுள்ளார்.

DIN

ஹைதராபாத் அணிக்கு எதிரான தோல்வி குறித்து மும்பை அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா நேர்மறையாக பேசியுள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 277/3 ரன்களைக் குவித்து ஐபிஎல் தொடர் வரலாற்றிலேயே அதிக ரன்களை எடுத்த அணி என்ற சாதனையை படைத்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மும்பை அணியின் பந்து வீச்சு மோசமானதாக இருந்ததாக பலரும் விமர்சித்தனர்.

தோல்வி குறித்து மும்பை அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா கூறியதாவது:

ஹைதராபாத் இவ்வளவு (277) ரன்கள் அடிப்பார்களென டாஸ் வென்றபோது நான் நினைக்கவில்லை. ஆடுகளம் சிறப்பாக இருந்தது. நீங்கள் எவ்வளவு மோசமாக அல்லது சிறப்பாக பந்து வீசியது என்பது முக்கியமில்லை, 277 என்பது எதிரணியினர் சிறப்பாக பேட்டிங் செய்ததையே குறிக்கிறது. எங்களது அணியின் பந்து வீச்சாளர்கள் நன்றாக வீசினார்கள். பௌலர்களுக்கு இந்த ஆடுகளம் கடினமானது . இரு அணியினரும் 500 ரன்கள் அடித்துவிட்டோம். அந்தளவுக்கு ஆடுகளம் பேட்டிங்கிக்குச் சாதகமானது. அங்கு இங்கு என மாற்றி பந்து வீசியிருக்கலாம். ஆனால், எங்களது அணி இளமையான வீரர்களைக் கொண்டது. நாங்கள் கற்றுக் கொள்கிறோம். சரியான நேரம் அமையும்போது எல்லாம் சரியாக நடக்கும் எனக் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பூரில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் மர்ம மரணமா? நயினார் நாகேந்திரன் கேள்வி!

பாஜக எம்பி மனோஜ் திவாரி கன்வாா் யாத்திரை

வங்கதேசத்தில் வேகமெடுக்கும் டெங்கு பரவல்! பலி எண்ணிக்கை 83 ஆக அதிகரிப்பு!

டெவான் கான்வே, டேரில் மிட்செல் அரைசதம்; 2-வது இன்னிங்ஸில் ஜிம்பாப்வே தடுமாற்றம்!

ஓபிஎஸுக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி!

SCROLL FOR NEXT