படம் | ஐபிஎல்
ஐபிஎல்

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக முதலில் பேட் செய்த சன் ரைசர்ஸ் ஹைதராபாத் 3 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் எடுத்துள்ளது.

DIN

ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக முதலில் பேட் செய்த சன் ரைசர்ஸ் ஹைதராபாத் 3 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் எடுத்துள்ளது.

ஐபிஎல் தொடரில் ஹைதராபாதில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.

அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா களமிறங்கினர். அபிஷேக் சர்மா 12 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன்பின் களமிறங்கிய அன்மோல்பிரீத் சிங் 5 ரன்களில் ஆட்டமிழக்க, டிராவிஸ் ஹெட் மற்றும் நிதீஷ் ரெட்டி ஜோடி சேர்ந்தனர். இந்த இணை அபாரமாக விளையாடியது. சீரான ஆட்டத்தை வெளிப்படுத்திய டிராவிஸ் ஹெட் 44 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும்.

அதன்பின் களமிறங்கிய க்ளாசன் அதிரடியாக 19 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். களமிறங்கியது முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிதீஷ் ரெட்டி சிக்ஸர்களை பறக்கவிட்டார். அவர் 42 பந்துகளில் 76 ரன்கள் குவித்து களத்தில் இருந்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்கள் அடங்கும்.

இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் 3 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் எடுத்துள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் தரப்பில் ஆவேஷ் கான் 2 விக்கெட்டுகளையும், சந்தீப் சர்மா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக அரசின் சாதனைகளை வீடு வீடாக மகளிா் கொண்டு செல்ல வலியுறுத்தல்!

குரூப் 2 தோ்வு: கோவையில் 83 போ் எழுதினா்

வடபுதுப்பட்டியில் நாளை மின் தடை

பாஜக மூலம் அமமுக தொகுதி உடன்படிக்கை: டிடிவி தினகரன்

அறக்கட்டளை சாா்பில் நல உதவிகள்: முதல்வா் ரங்கசாமி தொடங்கி வைத்தாா்

SCROLL FOR NEXT