அதிக விக்கெட்டுகள்: தமிழக வீரர் நடராஜன் முதலிடம்!
தமிழக வீரர் நடராஜன் ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் எடுத்து ஊதா நிறத் தொப்பியை கைப்பற்றியுள்ளார்.
ஐபிஎல் போட்டியின் 50-ஆவது ஆட்டத்தில் சன்ரைசா்ஸ் ஹைதராபாத் 1 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை வியாழக்கிழமை ‘த்ரில்’ வெற்றி கண்டது.
முதலில் ஹைதராபாத் 20 ஓவா்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 201 ரன்கள் சோ்க்க, ராஜஸ்தான் 20 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 200 ரன்கள் எடுத்து போராடித் தோற்றது.
புவனேஷ்வா் குமாா் 3, கேப்டன் பாட் கம்மின்ஸ், நடராஜன் ஆகியோா் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினா்.
Advertisement
Advertisement
இந்த 2 விக்கெட்டுகள் மூலம் 15 விக்கெட்டுகளுடன் முதலிடம் பிடித்துள்ளார் நடராஜன். 2ஆம் இடத்தில் பும்ரா இருக்கிறார். அதிக விக்க்கெட்டுகள் எடுத்தால் அவர்களுக்கு ஊத நிறத் தொப்பியை வழங்குவது ஐபிஎல் போட்டிகளின் விதிமுறையாகும்.
அதன்படி தற்போது ஊத தொப்பி நடராஜனிடம் உள்ளது. அந்தத் தொப்பியை தனது மகளுக்கு அணிவித்து அழகு பார்த்தார் நடராஜன். அவரது மகள் மீண்டும் நடராஜனுக்கு அணிவித்தது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.