படம் | ஐபிஎல்
ஐபிஎல்

கௌதம் கம்பீர் ஸ்டைலில் விளையாடுகிறோம்: ஹர்ஷித் ராணா

கொல்கத்தாவின் வெற்றிப்பயணத்துக்கு காரணம் கௌதம் கம்பீர் என அந்த அணியின் பந்துவீச்சாளர் ஹர்ஷித் ராணா தெரிவித்துள்ளார்.

DIN

கொல்கத்தாவின் வெற்றிப்பயணத்துக்கு காரணம் கௌதம் கம்பீர் என அந்த அணியின் பந்துவீச்சாளர் ஹர்ஷித் ராணா தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் லக்னௌவில் நடைபெற்ற நேற்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 98 ரன்கள் வித்தியாசத்தில் லக்னௌவை வீழ்த்தியது. இதன்மூலம், புள்ளிப்பட்டியலிலும் முதலிடத்துக்கு முன்னேறியது.

இந்த நிலையில், கொல்கத்தாவின் வெற்றிப்பயணத்துக்கு காரணம் கௌதம் கம்பீர் என அந்த அணியின் பந்துவீச்சாளர் ஹர்ஷித் ராணா தெரிவித்துள்ளார்.

ஹர்ஷித் ராணா

இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: இந்தப் போட்டியில் மட்டுமின்றி, நடப்பு ஐபிஎல் தொடர் முழுவதுமே கௌதம் கம்பீர் எந்த மாதிரியான ஸ்டைலில் நாங்கள் விளையாட வேண்டும் என நினைக்கிறாரோ அதிலே கவனம் செலுத்தி விளையாடி வருகிறோம். ஆட்டத்தை எங்களுக்கு சாதகமாக மாற்ற வேண்டும் என்பதில் அவருக்கு மிகுந்த அறிவு இருக்கிறது. ஆட்டத்தின் நடுவே அவர் கொடுக்கும் யோசனைகள் எங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கிறது என்றார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 11 போட்டிகளில் விளையாடியுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 8 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காலமானாா் நா. பிரகாசம்

முடிவுக்கு வந்தது தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்!

972 அரசுப் பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கல்

திருமலையில் 76,447 பக்தா்கள் தரிசனம்!

ஊரக வளா்ச்சித்துறை சமத்துவப் பொங்கல் விழா!

SCROLL FOR NEXT