-
ஐபிஎல்

பதோனி அதிரடியால் தப்பித்த லக்னௌ அணி 165 ரன்கள் சேர்ப்பு!

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 20 ஓவர் முடிவில் லக்னௌ அணி 165 ரன்கள் எடுத்துள்ளது.

DIN

ஐபிஎல் லீக் போட்டியின் 57-ஆவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாதுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பேட்டிங்கினை தேர்வு செய்துள்ளது.

இரண்டு அணிகளும் 12 புள்ளிகளில் இருப்பதால் இந்தப் போட்டி மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

வெற்றி பெறும் அணி 3-ஆவது இடத்துக்கு முன்னேறும். ப்ளே ஆஃப்கான வாய்ப்பும் அதிகரிக்கும்.

பேட்டிங் ஆடிய லக்னௌ அணி 20 ஓவர் முடிவில் 165/4 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஆயுஷ் பதோனி 55 ரன்கள் எடுத்து அசத்தினார். நிகோலஸ் பூரன் 48 ரன்கள் எடுத்தார்.

ஹைதராபாத் அணியில் புவனேஷ் 2 விக்கெட்டுகள், கம்மின்ஸ் 1 விக்கெட்டும் எடுத்தார். கம்மின்ஸ் ஒரு ரன் அவுட்டும் செய்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வடதமிழகத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி தொடங்கியது! தேவையான ஆவணங்கள் என்ன?

இரட்டை இலை விவகாரம்: தேர்தல் ஆணையத்துக்கு செங்கோட்டையன் கடிதம்!

தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்!

சுங்கச் சாவடி கட்டண விவகாரம்: போக்குவரத்துக் கழக அதிகாரி பதிலளிக்க உத்தரவு

SCROLL FOR NEXT