படம் |ஐபிஎல்
ஐபிஎல்

ஆர்சிபிக்கு எதிராக தில்லி கேபிடல்ஸை வழிநடத்தப்போவது யார் தெரியுமா?

ஆர்சிபிக்கு எதிரான நாளையப் போட்டியில் ரிஷப் பந்த விளையாட தடைவிதிக்கப்பட்ட நிலையில், அணியை வழிநடத்தப்போவது யார் தெரியுமா?

DIN

ஆர்சிபிக்கு எதிரான நாளையப் போட்டியில் ரிஷப் பந்த விளையாட தடைவிதிக்கப்பட்ட நிலையில், அணியை வழிநடத்தப்போவது யார் என அந்த அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்காக அணிகள் ஒவ்வொன்றும் தங்களுக்குள் கடுமையாக போட்டியிட்டுக் கொள்கின்றன. நடப்பு ஐபிஎல் தொடரில் மூன்றாவது முறையாக மெதுவாக ஓவர் வீசியதால் தில்லி அணியின் கேப்டன் ரிஷப் பந்த்துக்கு நாளை பெங்களூருவுக்கு எதிராக நடைபெறும் முக்கியமான போட்டியில் விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ரிஷப் பந்த் அணியில் இல்லாதது மிகப் பெரிய இழப்பு எனவும், அவருக்குப் பதிலாக அக்‌ஷர் படேல் அணியைக் கேப்டனாக வழிநடத்துவார் எனவும் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

அக்‌ஷர் படேல்

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஆர்சிபிக்கு எதிரான நாளையப் போட்டியில் தில்லி அணியின் கேப்டனாக அக்‌ஷர் படேல் செயல்படுவார். கடந்த இரண்டு சீசன்களாக தில்லி அணியின் துணைக் கேப்டனாக அவர் இருந்து வருகிறார். ஐபிஎல் தொடரில் அவர் மிகுந்த அனுபவம் வாய்ந்தவர். ஆட்டத்தினை நன்கு புரிந்து வைத்திருப்பவர். ரிஷப் பந்த் விளையாட தடை விதிக்கப்படலாம் என்பது தொடர்பாக கடந்த இரண்டு நாள்களாக ஆலோசித்தோம். அவர் அணியில் இல்லாதது மிகப் பெரிய இழப்பு என்றார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் 12 போட்டிகளில் விளையாடியுள்ள தில்லி கேபிடல்ஸ் 6 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒரே ஒரு வங்கிக் கணக்கு வைத்திருக்கிறீர்களா? ஆபத்து

ராகுலின் குற்றச்சாட்டு தவறானவை, ஆதாரமற்றவை! தேர்தல் ஆணையம்

காஸா மூச்சுத் திணறுகிறது; இந்த பயங்கரத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்: முதல்வர் பதிவு

ஒரு ஏழைத்தாயின் மகன்... விமர்சனத்திற்கு ஆளாகும் ஜிவி பிரகாஷ்!

முன்னாள் முதல்வர் சதானந்த கௌடாவின் வங்கிக் கணக்குகளை ஹேக் செய்து ரூ. 3 லட்சம் திருட்டு!

SCROLL FOR NEXT