பிளே ஆஃப் சுற்றுக்கான போட்டியில் 7 அணிகள் களத்தில் இருப்பதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் டாம் மூடி தெரிவித்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற அணிகள் தங்களுக்குள் கடுமையாக மோதிக்கொள்கின்றன. பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறுவதற்கான போட்டியில் நீடிப்பதற்கான முக்கியமான போட்டி நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் தில்லி கேபிடல்ஸை 47 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வீழ்த்தியது.
இந்த நிலையில், முக்கியமான போட்டிகளில் வெற்றி பெறும் திறமையை ஆர்சிபி வெளிப்படுத்துவதாகவும், பிளே ஆஃப் சுற்றுக்கான போட்டியில் 7 அணிகள் களத்தில் இருப்பதாகவும் டாம் மூடி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: முக்கியமான போட்டிகளில் வெற்றி பெறும் திறன் ஆர்சிபிக்கு இருப்பதை மீண்டும் ஒருமுறை அவர்கள் செய்துகாட்டியுள்ளனர். ஆர்சிபி தனது அடுத்த முக்கியமான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸை எதிர்கொள்கிறது. இந்திய கிரிக்கெட் மற்றும் உலக கிரிக்கெட்டில் தோனி மற்றும் கோலி இருவரும் ஆதிக்கம் செலுத்துபவர்கள். எங்கு விளையாடினாலும் அவர்கள் சிறப்பாக விளையாடக் கூடியவர்கள்.
ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மட்டுமே இதுவரை பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. 7 அணிகள் இன்னும் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் போட்டியில் உள்ளனர். யார் வேண்டுமானாலும் பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறலாம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.