படம் | ஐபிஎல்
ஐபிஎல்

பந்துவீச்சில் மிரட்டிய கேகேஆர்; 159 ரன்களுக்கு ஆட்டமிழந்த சன்ரைசர்ஸ்!

கொல்கத்தாவுக்கு எதிரான குவாலிஃபையர் 1 போட்டியில் முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 159 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

DIN

கொல்கத்தாவுக்கு எதிரான குவாலிஃபையர் 1 போட்டியில் முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 159 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

ஐபிஎல் தொடரில் அகமதாபாதில் நடைபெற்று வரும் குவாலிஃபையர் 1 போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.

அந்த அணிக்கு தொடக்கமே பேரதிர்ச்சியாக அமைந்தது. டிராவிஸ் ஹெட் 0 ரன்களிலும், அபிஷேக் சர்மா 3 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்தனர். அதன்பின் களமிறங்கிய நிதீஷ் ரெட்டி 9 ரன்களிலும், ஷாபாஸ் அகமது 0 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து, ராகுல் திரிபாதி மற்றும் கிளாசன் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை ஓரளவுக்கு சன்ரைசர்ஸ் அணிக்காக ரன்களை சேர்த்தது. இருப்பினும், கிளாசன் 21 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும்.

விக்கெட்டுகள் விழுந்தபோதிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராகுல் திரிபாதி அரைசதம் எடுத்து அசத்தினார். அவர் 35 பந்துகளில் 55 ரன்கள் எடுத்து துரதிருஷ்டவசமாக ரன் அவுட் ஆனார். அதில் 7 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். ஆட்டத்தின் இறுதிக்கட்டத்தில் கேப்டன் பாட் கம்மின்ஸ் 24 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தார். இதன்மூலம், சன்ரைசர்ஸ் ஓரளவுக்கு வெற்றி பெறும் அளவிற்கான ரன்களை சேர்த்தது.

அந்த அணி 19.3 ஓவர்களின் முடிவில் 159 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். வைபவ் அரோரா, ஹர்ஷித் ராணா, சுனில் நரைன், ஆண்ட்ரே ரஸல் மற்றும் வருண் சக்கரவர்த்தி தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் களமிறங்குகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாஜக கூட்டணியில் இருந்து டிடிவி தினகரன் விலகல்!

குமாரசம்பவம் டிரெய்லர்!

ஜிஎஸ்டி வரிகள் குறைப்பு: வீட்டு உபயோகப் பொருள்கள் விலை குறையும்!

இந்தியாவைப் பாராட்டிய ஜெர்மனி!

குமாரசம்பவம் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT