எம்.எஸ்.தோனி  படம் | ஐபிஎல்
ஐபிஎல்

அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் எம்.எஸ்.தோனி விளையாடுவாரா? காசி விஸ்வநாதன் பதிலால் ரசிகர்கள் உற்சாகம்!

அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் எம்.எஸ்.தோனி விளையாடுவார் என மிகுந்த நம்பிக்கையுள்ளதாக சிஎஸ்கே அணி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

DIN

அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் எம்.எஸ்.தோனி விளையாடுவார் என மிகுந்த நம்பிக்கையுள்ளதாக அந்த அணியின் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் கேப்டன் பதவியை ருதுராஜிடம் ஒப்படைத்துவிட்டு, ஒரு சாதாரண வீரராக அணியில் எம்.எஸ்.தோனி விளையாடினார். ஆட்டத்தின் இறுதியில் களமிறங்கி அதிரடியை வெளிப்படுத்திய எம்.எஸ்.தோனியின் ஆட்டம் அவரது ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்தது. பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற முடியாமல் சிஎஸ்கே வெளியேறிய பிறகு, அடுத்த ஐபிஎல் தொடரில் தோனி விளையாடுவாரா என்ற கேள்வி பலருக்கும் எழுந்தது.

இந்த நிலையில், அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் எம்.எஸ்.தோனி விளையாடுவார் என மிகுந்த நம்பிக்கையுள்ளதாக அந்த அணியின் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளது தோனியின் ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியளித்துள்ளது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: அடுத்த ஐபிஎல் தொடரில் எம்.எஸ்.தோனி விளையாடுவாரா என்ற கேள்விக்கு அவரால் மட்டுமே பதில் கூற முடியும். அவர் என்ன முடிவு எடுத்தாலும் அதனை நாங்கள் மதிக்கிறோம். அதனால், அவர் விளையாடுவாரா? மாட்டாரா? என்ற முடிவை அவரிடமே நாங்கள் விட்டுவிட்டோம்.

அவரது முடிவுகளை எப்போதும் அவர் சரியான நேரத்தில் அனைவருக்கும் தெரிவிப்பார் என நம் அனைவருக்குமேத் தெரியும். அதேபோல் இந்த முறையும் எம்.எஸ்.தோனி அவரது முடிவை உரிய நேரத்தில் அறிவிப்பார் என எதிர்பார்க்கலாம். ஆனால், அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் தோனி விளையாடுவார் என்ற நம்பிக்கை மிகவும் அதிகமாக இருக்கிறது. இது ரசிகர்களுடைய எதிர்பார்ப்பு மட்டுமின்றி என்னுடைய எதிர்பார்ப்பும் கூட என்றார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் 73 பந்துகளை சந்தித்த எம்.எஸ்.தோனி 161 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

AVATAR - Fire and Ash - Review | உலகத் தரத்தில் VFX காட்சிகள்! ஆனால் கதை? | James Cameron

அரசனில் இணைந்த டூரிஸ்ட் ஃபேமிலி நடிகை!

கடைசி டி20: திலக் வர்மா, பாண்டியா அதிரடியால் தென்னாப்பிரிக்காவுக்கு 232 ரன்கள் இலக்கு

SIR: தமிழகத்தில் 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் | செய்திகள்: சில வரிகளில் | 19.12.25

சென்னை திரைப்பட விழா: பறந்து போ, டூரிஸ்ட் ஃபேமிலி படங்களுக்கு விருது!

SCROLL FOR NEXT