போட்டியின் போது... 
ஐபிஎல்

சிஎஸ்கே - தில்லி போட்டி: டிக்கெட் விற்பனை! கிரிக்கெட் ரசிகர்கள் கவனிக்க..!

சிஎஸ்கே - தில்லி போட்டி: டிக்கெட் விற்பனை பற்றி...

DIN

சென்னை சேப்பாக்கத்தில் ஏப்ரல் 5 ஆம் தேதியன்று நடைபெறும் சென்னை, தில்லி அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை(ஏப்ரல் 2) தொடங்குகிறது.

சேப்பாக்கத்தில் நடைபெற்ற மும்பை, பெங்களூரு அணிகளுக்கு இடையிலான முதலிரண்டு போட்டிகளில் ஒரு வெற்றியும், ஒரு தோல்வியும் அடைந்த சென்னை அணி, குவாஹட்டியில் ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியிலும் தோல்வியைடைந்து கடும் விமர்சனங்களைப் பெற்றுள்ளது.

சென்னை அணியின் மகேந்திர சிங் தோனி ஓய்வுபெறுவார் என்ற மனநிலை மக்களிடையே நிலவுவதால், இந்தப் போட்டிக்கான டிக்கெட் சிறிது நேரத்திலேயே விற்றுத்தீர்ந்து விடும் எனக் கூறப்படுகிறது.

மேலும், சிஎஸ்கே - மும்பை இந்தியன்ஸ், சிஎஸ்கே - பெங்களூரு இடையேயான போட்டி டிக்கெட்கள் சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்ததால் இந்த போட்டிக்கான டிக்கெட்டுகளும் சிறிது நேரத்திலேயே தீர்ந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை மெட்ரோவில் சிஎஸ்கே கிரிக்கெட் டிக்கெட்டை காண்பித்து இலவசமாக பயணிக்கலாம் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நாளை காலை 10.15 மணி முதல் ஐபிஎல் டிக்கெட் விற்பனை தொடங்குகிறது. குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ.1,700 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த டிக்கெட்டுகளை www.chennaisuperkings.com என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிக்கெட் விலைகள் மற்றும் ஸ்டாண்டுகள்

ரூ.1,700 – சி/டி/இ லோயர்

ரூ.2,500 –ஐ/ஜே/கெ அப்பர்

ரூ.3,500 – சி/டி/இ அப்பர்

ரூ.4,000 – ஐ/ஜே/கெ லோயர்

ரூ.7,500 – கே.எம்.கே டெரஸ்

இணையதளத்தில் விற்பனை செய்யப்படும் டிக்கெட்டுகள் சில நிமிடங்களிலேயே விற்றுத்தீர்ந்து விடுவதால், கள்ளச்சந்தையில் அதிகவிலைக்கு கிட்டத்தட்ட ரூ.15,000 முதல் ரூ.40,000 வரை வாங்கும் நிலை இருப்பதாகவும் சில ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூலி இசை வெளியீட்டு விழாவில் ஆமிர் கான்!

ஜோ ரூட்டை வம்பிழுத்தது ஏன்? பிரசித் கிருஷ்ணா விளக்கம்!

தேர்தல் ஆணையத்துக்கு எதிராக ஆதார அணுகுண்டை வெடிக்கச் செய்யுங்கள்: ராகுலுக்கு ராஜ்நாத் சவால்!

உலகிலேயே தந்தையை வேவு பார்த்த மகன் அன்புமணிதான்! - ராமதாஸ்

பசி, பட்டினி, வலி, அச்சம்... காஸாவில் மக்கள் ஒரு நாளை எப்படிக் கழிக்கிறார்கள்?

SCROLL FOR NEXT