படம் | AP
ஐபிஎல்

திட்டங்களை தெளிவாக செயல்படுத்திய மும்பை இந்தியன்ஸ்; பாராட்டிய நியூசி. வீரர்!

மும்பை இந்தியன்ஸ் அதனுடைய திட்டங்களை தெளிவாக செயல்படுத்தி முதல் வெற்றியைப் பெற்றுள்ளதாக நியூசிலாந்து வீரர் பாராட்டியுள்ளார்.

DIN

மும்பை இந்தியன்ஸ் அதனுடைய திட்டங்களை தெளிவாக செயல்படுத்தி முதல் வெற்றியைப் பெற்றுள்ளதாக நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் பாராட்டியுள்ளார்.

ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே திடலில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, நடப்பு ஐபிஎல் தொடரில் தனது வெற்றிக் கணக்கைத் தொடங்கியது.

மும்பை இந்தியன்ஸ் அணியில் அறிமுக வீரராக களமிறங்கிய அஸ்வனி குமார் அபாரமாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அறிமுகப் போட்டியில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்தார். பேட்டிங்கில் அதிரடியாக விளையாடிய ரியான் ரிக்கல்டான் அரைசதம் விளாசி அசத்தினார். அவர் 41 பந்துகளில் 62 ரன்கள் எடுத்தார். 117 ரன்கள் என்ற எளிய இலக்கை மும்பை இந்தியன்ஸ் அணி 12.5 ஓவர்களில் எட்டி கொல்கத்தாவை வீழ்த்தியது.

கேன் வில்லியம்சன் பாராட்டு

கொல்கத்தா நைட் ரைடர்ஸை வீழ்த்தி தனது வெற்றிக் கணக்கை தொடங்கிய நிலையில், ஆட்டம் முழுவதையும் மும்பை இந்தியன்ஸ் அணி தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்ததாக நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் பாராட்டியுள்ளார்.

கேன் வில்லியம்சன்

இது தொடர்பாக ஜியோஹாட்ஸ்டாரில் கேன் வில்லியம்சன் பேசியதாவது: மும்பை இந்தியன்ஸ் அணி ஆட்டம் முழுவதும் சிறப்பாக செயல்பட்டார்கள். டாஸ் வென்றது, பந்துவீச்சைத் தேர்வு செய்தது, கூடுதல் வேகப் பந்துவீச்சாளராக அஸ்வனி குமாரை அணிக்குள் கொண்டு வந்தது என அவர்களது திட்டங்கள் அனைத்தையும் அழகாக செயல்படுத்தினார்கள். மும்பை இந்தியன்ஸ் அணி சீரான இடைவெளிகளில் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை வீழ்த்தியது சிறப்பான விஷயம் என நினைக்கிறேன். எதிரணியை பார்ட்னர்ஷிப் அமைக்க அவர்கள் விடவில்லை. ஆட்டம் முழுவதையும் மும்பை இந்தியன்ஸ் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜோ ரூட்டை வம்பிழுத்தது ஏன்? பிரசித் கிருஷ்ணா விளக்கம்!

தேர்தல் ஆணையத்துக்கு எதிராக ஆதார அணுகுண்டை வெடிக்கச் செய்யுங்கள்: ராகுலுக்கு ராஜ்நாத் சவால்!

உலகிலேயே தந்தையை வேவு பார்த்த மகன் அன்புமணிதான்! - ராமதாஸ்

பசி, பட்டினி, வலி, அச்சம்... காஸாவில் மக்கள் ஒரு நாளை எப்படிக் கழிக்கிறார்கள்?

“உடல்நலம் பாதிக்கப்பட்டாலும் மக்கள்பணி ஆற்ற வேண்டும்!” முதல்வர் MK Stalin | DMK

SCROLL FOR NEXT