முகப்பு
ஐபிஎல்

மும்பை அணியில் இளம் வீரர்கள் தேர்வு குறித்து பேசிய ஹார்திக் பாண்டியா!

மும்பை இந்தியன்ஸ் அணியில் இளம் வீரர்களை தேர்வு செய்தது குறித்து...

Updated On : 1 ஏப்ரல், 2025 at 10:38 AM
இளம் வீரருடன் சூர்யகுமார், ஹார்திக் பாண்டியா. - படம்: ஏபி
பகிர்:
Updated On : 1 ஏப்ரல், 2025 at 10:13 AM

ஐபிஎல் 18ஆவது சீசனின் 12ஆவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு நிர்ணயிக்கப்பட்ட 117 என்ற இலக்கினை 12.5 ஓவர்களில் வென்று அசத்தியது.

இந்தப் போட்டியில் மும்பை சார்பாக அறிமுகமான அஸ்வனி குமார் 4 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.

சிஎஸ்கே உடனான போட்டியில் மும்பை தோல்வியுற்றாலும் விக்னேஷ் புதூர் என்ற இளம் வீரரை அறிமுகப் படுத்தியது.

Advertisement

ஐபிஎல் தொடர்களில் பல திறமைசாளிகலை அறிமுகப்படுத்தி வரும் மும்பை அணியின் ஸ்கௌட்டிங் (சாரணர்) அணி குறித்து கேப்டன் ஹார்திக் பாண்டியா பேசியதாவது:

Updated On : 1 ஏப்ரல், 2025 at 10:30 AM

எங்களது சாரணர் குழுவுக்கு நன்றி

வெற்றி பெற்றது மிகவும் திருப்தியாக இருக்கிறது. குறிப்பாக, சொந்த மண்ணில் வெற்றி பெறுவது கூடுதல் மகிழ்ச்சி. நாங்கள் வெற்ற பெற்ற விதம், அணியாக ஒவ்வொருவரும் சிறப்பாக பங்காற்றினார்கள்.

இங்கு ஒன்றும் அங்கொன்றுமாக ஒரு நல்ல வீரரை கண்டுபிடிப்பது சவாலான விஷயம். எங்கள் அணியில் நம்பிக்கை வைத்து எடுக்கும்போது அதற்கு பலன் கிடைக்கிறது.

இந்த பிட்ச்சில் அஸ்வினி பந்துவீசினால் நன்றாக இருக்குமென நாங்கள் நம்பினோம். முதலில் இதற்கெல்லாம் ஸ்கௌட்டிங் (சாரணர்) குழுவிற்கு நன்றி தெரிவிக்க வேண்டும். அவர்கள்தான் அனைத்து இடங்களுக்கும் சென்று இந்த இளம் வீரர்களை தேர்வு செய்தார்கள்.

Updated On : 1 ஏப்ரல், 2025 at 10:30 AM

ரஸ்ஸல் விக்கெட்டினை எடுத்த விதம் மிகவும் முக்கியமானது

எங்களது பயிற்சி ஆட்டத்தின்போது அவரிடம் லேட் ஸ்விங் இருப்பதாக தெரிந்தது. மேலும் வித்தியாசமான ஆக்‌ஷன், கூடுதலாக இடதுகை பந்துவீச்சாளரகாவும் இருந்தார்.

குறிப்பாக ஆண்ட்ரே ரஸ்ஸல் விக்கெட்டினை எடுத்த விதம் மிகவும் முக்கியமானது. டி காக் கேட்ச்சை பிடித்ததில் இருந்து இது ஆரம்பித்தது.

ஒரு வேகப்பந்து வீச்சாளர் இவ்வளவு தூரம் எகிறி பந்தினைப் பிடிப்பதைப் பார்க்க நன்றாக இருக்கிறது என்றார்.

முதல் வெற்றையை ருசித்த மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளிப் பட்டியலில் 6ஆவது இடத்துக்கு முன்னேறியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.