லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் வீரர் திக்வேஷ் ரதிக்கு 25% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் போட்டியின் 13-ஆவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னௌ சூப்பா் ஜெயன்ட்ஸை செவ்வாய்க்கிழமை சாய்த்தது. இந்தப் போட்டியில் அசத்தலாக விளையாடிய பிரப்சிம்ரன் சிங், கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடியாக அரைசதம் விளாசினர்.
இந்தப் போட்டியில் 2-வது இன்னிங்ஸில் தொடக்க ஆட்டக்காரர் பிரியன்ஷ் ஆர்யா, லக்னௌ வீரர் திக்வேஷ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஆர்யா ஆட்டமிழந்ததும் அவர் அருகில் சென்ற திக்வேஷ் கையெழுத்து போடுவது போல சைகை காட்டினார்.
இதையும் படிக்க: சிஎஸ்கே - தில்லி போட்டி: டிக்கெட் விற்பனை! கிரிக்கெட் ரசிகர்கள் கவனிக்க..!
பிரியன்ஷ் ஆர்யா மற்றும் திக்வேஷ் ரதி இருவரும் தில்லி அணிக்காக விளையாடி வருகின்றனர். மேலும், இருவர்களும் நண்பர்கள் என்பதால், அவர் அப்படி காண்பித்தார். எதுவாயினும், போட்டிக்களத்தில் எதிரணி வீரரை விமர்சிப்பது சட்டவிரோதமானது. இதனால், அவருக்கு போட்டிக் கட்டணத்தில் இருந்து 25 சதவிகிதம் அபராதமும், ஒரு தகுதி இழப்பு புள்ளியும் வழங்கப்பட்டுள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன்னதாக மேற்கிந்திய தீவுகள் வேகப்பந்து வீச்சாளர் கெஸ்ரிக் வில்லியம்ஸ் இதுபோன்று சைகை காண்பித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வந்தார். 2019 ஆம் ஆண்டு இந்தியா - மேற்கிந்திய தீவுகள் போட்டியில் விராட் கோலியிடம் வில்லியம்ஸ் இதேபோன்று வம்பிழுக்க அவரை விராட் கோலி தனது பாணியில் அடித்து துவைத்தது நினைவுகூரத்தக்கது.
இதையும் படிக்க: செலவில்லாமல் ‘ஜிப்லி’ படங்களை உருவாக்குவது எப்படி?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.