வைபவ் அரோரா படம்: எக்ஸ் / கேகேஆர்
ஐபிஎல்

ஆட்ட நாயகனான இம்பாக்ட் வீரர்..! வெற்றிக்குப் பிறகு வைபவ் அரோரா பேசியதென்ன?

இம்பாக்ட் வீரராக களமிறங்கி ஆட்டநாயகன் ஆனது குறித்து வைபவ் அரோரா பேசியதாவது...

DIN

இம்பாக்ட் வீரராக களமிறங்கி ஆட்டநாயகனானது குறித்து நெகிழ்ச்சியாகப் பேசியுள்ளார் வைபவ் அரோரா.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணி சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 80 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் கேகேஆர் அணியில் இம்பாக்ட் வீரராக வேகப் பந்துவீச்சாளர் வைபவ் அரோரா களமிறங்கினார்.

முதல் ஓவரில் 2ஆவது பந்திலேயே டிராவிஸ் ஹெட் விக்கெட்டை வீழ்த்தினார்.

இம்பாக்ட் வீரர் ஆட்ட நாயகனான கதை!

அடுத்து வீசிய அவரது 2ஆவது ஓவரில் முதல் பந்தில் விக்கெட் எடுத்து ரன்களேதுமின்றி மெய்டன் ஓவரை வீசினார்.

இப்படியாக 4 ஓவர்கள் வீசி டிராவிஸ் ஹெட், நிதீஷ் குமார் ரெட்டி, ஹென்ரிச் கிளாசன் என 3 முக்கியமான விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

அதிக டாட் பந்துகள் வீசியதற்காக விருது வாங்கிய வைபவ் அரோரா.

கடைசியில் ஆட்ட நாயகனாகவும் வைபவ் அரோரா தேர்வு செய்யப்பட்டார். மேலும், அதிக டாட் பந்துகள் வீசியதற்காகவும் விருது வாங்கினார்.

போட்டி முடிந்த பிறகு வைபவ் அரோரா பேசியதாவது:

வெளியே இருந்து பிட்சை கவனிப்பேன்

இம்பாக்ட் வீரராக விளையாடுவதற்கு நான் என்னைத் தயாராக வைத்திருக்கிறேன்.

வெளியே இருந்து பிட்ச்சில் பந்துக்கு ஸ்விங் இருக்கிறதா அல்லது பந்து நின்று வருகிறதா என்பதை கவனித்துக்கொண்டே வருவேன்.

முதலில் ஸ்விங்குக்கு முக்கியத்துவம் அளிப்பேன். அடுத்ததாக 5-6ஆவது ஓவர்களில் யார்க்கர், கட்டர் வகையான பந்துகளுக்கு முக்கியத்துவம் அளிப்பேன்.

எங்களது திட்டமிடலில் ஒவ்வொரு வீரருக்கும் ஒரு திட்டம் வைத்திருக்கிறோம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் சரிந்து ரூ.87.68 ஆக நிறைவு!

ஊஊஊ... வடிவேலுவுடனான விடியோவை பகிர்ந்த பிரபு தேவா!

எந்தன் நெஞ்சில் நீங்காத... பாவனா!

உன்னோடு நானும்... ஜெனிலியா!

முதல் சுற்றிலேயே தோல்வி: விரக்தியால் டென்னிஸ் ராக்கெட்டை உடைத்த மெத்வதேவ்!

SCROLL FOR NEXT