PTI
ஐபிஎல்

ஐபிஎல்: 400+ ரன்கள் ஒரே போட்டியில்.. பெங்களூரு த்ரில் வெற்றி!

மும்பை இந்தியன்ஸ் போராடி தோற்றது!

DIN

மும்பை: நடப்பு ஐபிஎல் தொடரின் 20-ஆவது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.

இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பந்துவீசிய மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சை பெங்களூரு அணி வீரர்கள் பவுண்டரிக்கு அப்பால் பறக்க விட்டனர். இதனால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு(ஆர்சிபி) 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 221 ரன்களை குவித்தது.

அடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் 222 ரன்கள் வெற்றி இலக்கை எட்ட கடுமையாகப் போராடியது. கேப்டன் ஹார்திக் பாண்டியா 15 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு 42 ரன்கள் விளாசியதால் ஆட்டம் மும்பை பக்கம் போனது.

இந்தநிலையில், மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவைப்பட்டது. கைவசம் 4 விக்கெட்டுகள் இருந்தன.

த்ரில்லிங்கான தருணத்தில் கடைசி ஓவரில் க்ருணல் பாண்டியா வீசிய முதல் பந்தில் சாண்ட்னெர் ஆட்டமிழந்தார். அவரது அடுத்த பந்திலேயே தீபக் சாஹரும் நடையைக் கட்டினார். 5-ஆவது பந்தில் நமானும் ஆட்டமிழந்தார்.

இதனால் மும்பை இந்தியன்ஸ் 9 விக்கெட் இழப்புக்கு 209 ரன்களை குவித்தது; 12 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வெற்றியை ருசித்தது.

கடைசி ஓவரில் பெங்களூரு அணி வீரர்கள் ஃபீல்டிங்கில் பம்பரமாகச் சுழன்று அணியின் வெற்றிக்கு வித்திட்டது ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இயக்குநா் எஸ்.என்.சக்திவேல் காலமானா்

பரிசுத்தம்... அவந்திகா மிஸ்ரா!

வசியக்காரி... சோனம் பஜ்வா!

பைக்கிலிருந்து தவறி விழுந்த நிலத்தரகா் உயரிழப்பு

அரக்கோணம் ஸ்ரீசுந்தர விநாயகா் கோயிலில் செப். 7-இல் பாலாலயம்

SCROLL FOR NEXT