மகேந்திர சிங் தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை கேப்டனாக வழிநடத்துவது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி பேசியுள்ளார்.
காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளிலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் விலகுவதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தரப்பில் இன்று (ஏப்ரல் 10) தெரிவிக்கப்பட்டது. எஞ்சியுள்ள போட்டிகளில் சிஎஸ்கேவை முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி கேப்டனாக வழிநடத்துவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: மீண்டும் கேப்டனாகிறார் தோனி! ருதுராஜ் கெய்க்வாட் விலகல்!
சௌரவ் கங்குலி கூறுவதென்ன?
மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸின் கேப்டனாக எம்.எஸ்.தோனி நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அணியைக் கேப்டனாக வழிநடத்தும்போது முற்றிலும் மாறுபட்ட தோனியாக இருப்பார் என அவருக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் சௌரவ் கங்குலி புகழாரம் சூட்டியுள்ளார்.
இது தொடர்பாக நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சௌரவ் கங்குலி பேசியதாவது: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக எம்.எஸ்.தோனி விளையாட வேண்டும் என்றால், அவர் கண்டிப்பாக சிஎஸ்கேவின் கேப்டனாக இருக்க வேண்டும். ஏனென்றால், கேப்டனாக முற்றிலும் மாறுபட்ட விதத்தில் (பீஸ்ட் மோட்) அவர் இருப்பார். இப்போதும் எம்.எஸ்.தோனியால் சிக்ஸர்கள் அடிக்க முடிகிறது.
இதையும் படிக்க: தோனியிடம் ஆட்டோகிராஃப் வாங்கி மகிழ்ந்த பஞ்சாப் கிங்ஸ் வீரர்கள்!
பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் அவர் சிக்ஸர்கள் விளாசியதை பார்த்தோம். அவருக்கு 43 வயதாகிறது. 2005 ஆம் ஆண்டில் அவர் விளையாடியதைப் போன்று தற்போதும் விளையாட வேண்டும் என எதிர்பார்க்கக் கூடாது. அப்போதுள்ள ஆட்டத்துக்கும் தற்போது அவர் விளையாடுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. ஆனால், அவரிடம் இன்னும் சிக்ஸர் விளாசும் ஆற்றல் அப்படியே இருப்பதாக நினைக்கிறேன். அவரது இத்தனை ஆண்டுகள் அனுபவத்தின் மூலம், ஆட்டம் குறித்து நிறைய விஷயங்கள் அவருக்கு தெரிந்திருக்கும். அதனால், சிஎஸ்கேவை வழிநடத்த எம்.எஸ்.தோனியே சரியான தெரிவாக இருப்பார் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.