சதம் விளாசிய அபிஷேக் சர்மாவுக்கு வாழ்த்து தெரிவித்த ஷ்ரேயாஸ் ஐயர் படம் | பஞ்சாப் கிங்ஸ் (எக்ஸ்)
ஐபிஎல்

அபிஷேக் சர்மா காட்டிய காகிதத்தை ஆர்வத்துடன் வாங்கி படித்த ஷ்ரேயாஸ் ஐயர்!

சதம் விளாசிய கொண்டாட்டத்தின்போது அபிஷேக் சர்மா ரசிகர்களிடம் காட்டிய காகிதத்தை பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் ஆர்வத்துடன் வாங்கி படித்தார்.

DIN

சதம் விளாசிய கொண்டாட்டத்தின்போது அபிஷேக் சர்மா ரசிகர்களிடம் காட்டிய காகிதத்தை பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் ஆர்வத்துடன் வாங்கி படித்தார்.

ஐபிஎல் தொடரில் ஹைதராபாதில் நேற்று (ஏப்ரல் 12) நடைபெற்ற போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் அபிஷேக் சர்மாவின் அபார ஆட்டத்தினால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் அதிரடியாக விளையாடிய தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா 40 பந்துகளில் அதிரடியாக சதம் விளாசி அசத்தினார். அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் 55 பந்துகளில் 141 ரன்கள் எடுத்து அசத்தினார். அதில் 14 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்ஸர்கள் அடங்கும். அதிரடியாக விளையாடி அணியின் வெற்றிக்கு உதவிய அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

ஷ்ரேயாஸ் ஐயர் ஆர்வம்

அதிரடியாக சதம் விளாசிய அபிஷேக் சர்மா மிகவும் மகிழ்ச்சியாக அதனைக் கொண்டாடினார். சதம் விளாசிய பிறகு, தனது பாக்கெட்டிலிருந்து அபிஷேக் சர்மா ஒரு காகிதத்தை எடுத்துக் காட்டியது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

அந்த காகிதத்தில் இந்த சதத்தினை ஹைதராபாத் அணியின் ரசிகர்களுக்கு சமர்ப்பிக்கிறேன் (திஸ் ஒன் இஸ் ஃபார் ஆரஞ்ச் ஆர்மி) என எழுதப்பட்டிருந்தது.

சதம் விளாசிய பிறகு அபிஷேக் சர்மா காட்டிய காதிதத்தில் என்ன எழுதியிருந்தது என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் மட்டுமின்றி, பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரும் மிகுந்த ஆர்வமாக இருந்தார். அந்த காகிதத்தில் என்ன எழுதியிருந்தது என்பதை ஷ்ரேயாஸ் ஐயர் அபிஷேக் சர்மாவிடமிருந்து ஆர்வத்துடன் வாங்கி படித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒரே இரவில் 20 ஆண்டுத் திட்டத்தை தகர்த்த மோடி அரசு! ராகுல் காந்தி

ராஜபாளையம் அருகே குடிபோதையில் தலையில் கல்லை போட்டு ஓட்டுநர் கொலை

சென்னை திரைப்பட விழா: சிறந்த நடிகருக்கான விருதை வென்ற சசிகுமார்!

அரசியல் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்! ஜன. 5-க்குள் வெளியிட தமிழக அரசுக்கு உத்தரவு!

சிக்மா படப்பிடிப்பை முடித்த ஜேசன் சஞ்சய் விஜய்..! டீசர் தேதி அறிவிப்பு!

SCROLL FOR NEXT