ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கு மனதளவில் தயாராக இருந்ததாகவும், தனக்கான வாய்ப்புக்காக காத்திருந்ததாகவும் தில்லி கேபிடல்ஸ் அணி வீரர் கருண் நாயர் பேசியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் தில்லியில் நேற்று (ஏப்ரல் 13) நடைபெற்ற போட்டியில் தில்லி கேபிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 12 ரன்கள் வித்தியாசத்தில் தில்லி கேபிடல்ஸை வீழ்த்தியது.
தில்லி கேபிடல்ஸ் தரப்பில் அதிரடியாக விளையாடிய கருண் நாயர் 40 பந்துகளில் 89 ரன்கள் குவித்து அசத்தினார். தில்லி கேபிடல்ஸின் முதல் நான்கு போட்டிகளில் விளையாடாமலிருந்த கருண் நாயர், மும்பைக்கு எதிரான போட்டியில் தனக்கு கிடைத்த வாய்ப்பினை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டார். இருப்பினும், தில்லி அணியால் வெற்றியை வசமாக்க முடியவில்லை.
வாய்ப்புக்காக காத்திருந்தேன்
ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கு மனதளவில் தயாராக இருந்ததாகவும், தனக்கான வாய்ப்புக்காக காத்திருந்ததாகவும் தில்லி கேபிடல்ஸ் அணி வீரர் கருண் நாயர் பேசியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: நேர்மையாக கூறவேண்டுமென்றால், நான் மிகுந்த நம்பிக்கையோடு இருந்தேன். நான் ஏற்கனவே ஐபிஎல் தொடரில் விளையாடியுள்ளேன். அதனால், போட்டிகள் எப்படி இருக்கப் போகிறது என்பது எனக்குத் தெரியும். என்னுள் நான் கூறிக்கொண்டது என்னவென்றால், முதலில் சில பந்துகளை பொறுமையாக எதிர்கொண்டு, அதற்கு பின் அதிரடியாக விளையாடிக் கொள்ளலாம் எனக் கூறிக்கொண்டேன். அதிர்ஷ்டவசமாக அனைத்தும் நன்றாக அமைந்தது. நான் நன்றாக விளையாடியது மகிழ்ச்சியளித்தது.
இதையும் படிக்க: வான்ஷ் பேடியைக் களமிறக்குமா சிஎஸ்கே? எகிறும் எதிர்பார்ப்பு!
ஃபாஃப் டு பிளெஸ்ஸி போன்ற முக்கியமான வீரர் அணியில் இல்லை. அணியின் பிளேயிங் லெவனில் இடம்பெறாமல் வெளியில் அமர்ந்திருக்கும் என்னைப் போன்ற பேட்ஸ்மேன்கள் எப்போதும் தயாராக இருக்க வேண்டும். அதனால், மனதளவில் நான் தயாராகவே இருந்தேன். எனக்கான வாய்ப்புக்காக காத்திருந்தேன். எனக்கான வாய்ப்பு கிடைத்தபோது நம்பிக்கை அதிகரித்தது. வாய்ப்பினை பயன்படுத்தி நன்றாக விளையாடினேன் என்றார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள தில்லி கேபிடல்ஸ் 4 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.