ஷேக் ரஷீத், எம்.எஸ்.தோனி. படங்கள்: ஏபி
ஐபிஎல்

அறிமுக வீரர் ஷேக் ரஷீத் குறித்து தோனி பேசியதென்ன?

சிஎஸ்கேவில் அறிமுகமான இளம் வீரர் ஷேக் ரஷீத் குறித்து எம்.எஸ்.தோனி பேசியதாவது...

DIN

ஆந்திரப் பிரதேஷத்தைச் சேர்ந்த ஷேக் ரஷீத் சிஎஸ்கே அணியில் நேற்றைய ( ஏப்.14) போட்டியில் அறிமுகமானார். 20 வயதாகும் ஷேக் ரசீத் தனது முதல் போட்டியிலேயே 19 பந்துகளில் 27 ரன்கள் அடித்தார்.

சிஎஸ்கே அணிக்கு தொடக்க வீரர்கள் இந்த சீசனில் சரியாக விளையாடாமல் இருந்தனர். ஷேக் ரஷீத் வருகை சிஎஸ்கே அணிக்கு பலமாக மாறியுள்ளது.

குண்டூரில் பிறந்த இவர் யு-19 இந்திய அணிக்கு துணை கேப்டனாக செயல்பட்டுள்ளார்.

சிஎஸ்கே அணியில் 2023 முதலே இருக்கும் ஷேக் ரஷீத், 2025 ஏலத்தில் ரூ.30 லட்சத்துக்கு வாங்கப்பட்டார்.

ஷேக் ரஷீத் குறித்து எம்.எஸ்.தோனி பேசியதாவது:

ஷேக் ரஷீத் எங்களுடன் சில ஆண்டுகளாக இருந்துள்ளார். வலைப் பயிற்சியில் வேகப் பந்துவீச்சாளர்கள், சுழல் பந்துவீச்சாளர்களை சிறப்பாக விளையாடினார்.

எங்களது ஒரே மாதிரியான அணுகுமுறையினால் தோல்விகள் மட்டுமே கிடைத்தன. அதனால், அணியில் சில மாற்றங்களை செய்ய வேண்டியிருந்தன.

ஷேக் ரஷீத் சிறப்பாக விளையாடினார். தனது பாரம்பரியான கிரிக்கெட் ஷாட்டுகள் மூலமாக எதிரணியினர் மீதும் ஆதிக்கம் செலுத்த கூடியவர். ஆனால், இது தொடக்கம்தான். பௌலர்கள் அவருக்கான திட்டங்களுடன் வருவார்கள். அவர் அதைச் சமாளிக்க வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்ரீ பாா்த்தசாரதி கோயிலில் சிறப்புக் கட்டண தரிசனங்கள் ரத்து: அமைச்சா் சேகா்பாபு

ஊடுருவலைத் தடுக்க கடும் நடவடிக்கை: பிரதமா் மோடி

மிதுன ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

தங்கம் இறக்குமதி 60 சதவீதம் சரிவு

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

SCROLL FOR NEXT