வருண் சக்கரவர்த்தி ஓவரில் ஆட்டமிழந்த மேக்ஸ்வெல்.  படம்: ஏபி
ஐபிஎல்

111 ரன்களுக்கு சுருண்ட பஞ்சாப்: ரசிகர்கள் அதிர்ச்சி!

கேகேஆர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் 111 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

DIN

கேகேஆர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் 111 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

சண்டிகரில் தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

பஞ்சாப் கிங்ஸ் அணி 15.3 ஓவர்களில் 111 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து அதன் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

இந்த சீசனில் அதிரடிக்கு பெயர்போன பஞ்சாப் கிங்ஸ் தனது மோசமான பேட்டிங்கினால் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக பிரப்சிம்ரன் சிங் 30 ரன்கள் அடித்தார்.

பெரிதும் எதிர்பார்த்த ஜோஷ் இங்லீஷ் வருண் சக்கரவர்த்தி ஓவரில் போல்ட் ஆனார்.

க்ளென் மேக்ஸ்வெல்லையும் வருண் போல்ட் ஆக்கியது குறிப்பிடத்தக்கது.

கொல்கத்தா அணியில் ஹர்சித் ராணா 3, வருண் சக்கரவர்த்தி, சுனில் நரைன் தலா 2 விக்கெட்டுகளும் வைப் அரோரா, ஆண்ட்ரிச் நார்ட்ஜே தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

பஞ்சாப் கிங்ஸ் ஸ்கோர் கார்டு

பிரியன்ஸ் ஆர்யா - 22

பிரப்சிம்ரன் சிங் - 30

ஷ்ரேயாஸ் ஐயர் - 0

ஜோஷ் இங்லீஷ் -0

நேஹல் வதேரா - 10

மேக்ஸ்வெல் - 7

சூர்யான்ஷ் ஷெட்ஜ் - 4

ஷஷாங்க் சிங் - 18

மார்கோ யான்சென் - 1

சேவியர் பார்ட்லெட் -11

அர்ஷ்தீப் சிங் - 1*

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி சிறப்பு! மீனாட்சியம்மன் கோயிலில் ஐந்து நடராஜர் தரிசனம்

ஊமைக்குக் குரல் கொடுத்த உத்தமராயப் பெருமாள்!

எதிர்ப்புகள் விலகும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

வாணியம்பாடியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழா

மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

SCROLL FOR NEXT