ஐபிஎல் 2025-இன் 37-ஆவது போட்டியில் முல்லன்பூர் திடலில் நடைபெறும் போட்டியில் ஆர்சிபி, பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.
பஞ்சாப் அணிக்கு எதிராக டாஸ் வென்ற ஆர்சிபி அணியின் கேப்டன் ரஜத் படிதார் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார்.
ஆர்சிபி அணியில் லிவிங்ஸ்டன் நீக்கப்பட்டு, ரோமாரியோ ஷெப்பர்டு சேர்க்கப்பட்டுள்ளார்.
பஞ்சாப் அணியில் எந்த மாற்றமும் இல்லை என அதன் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் கூறியுள்ளார்.
10 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் 3ஆவது இடத்தில் உள்ள பஞ்சாப் இதில் வெற்றி பெற்றால் 12 புள்ளிகளுடன் முதலிடத்துக்குச் செல்லும்.
8 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் 5ஆவது இடத்தில் உள்ளஆர்சிபி இந்தப் போட்டியில் அபாரமாக வென்றால் முதலிடத்துக்குச் செல்லவும் வாய்ப்பிருக்கிறது.
பஞ்சாப் கிங்ஸ்: பிரப்சிம்ரன் சிங், பிரியான்ஷ் ஆர்யா, ஷ்ரேயாஸ் ஐயர், ஜோஷ் இங்கிலிஷ், நேஹல் வதேரா, ஷஷாங் சிங், மார்கஸ் ஸ்டாய்னிஸ், மார்கோ ஜான்சன், சேவியர் பார்ட்லெட், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: பிலிப் சால்ட், விராட் கோலி, ரஜத் படிதார், ஜிதேஷ் சர்மா, டிம் டேவிட், க்ருணால் பாண்டியா, ரொமாரியோ ஷெப்பர்ட், புவனேஷ்வர் குமார், சுயாஷ் சர்மா, ஜாஸ் ஹேசில்வுட், யஷ் தயாள
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.