ஈடன் கார்டன்ஸ் பிட்ச் மேற்பார்வையாளரை விமர்சித்ததால் வர்ணனையாளர்கள் ஹர்ஷா போக்லே, சைமன் டௌலை சிஏபி (பெங்கால் கிரிக்கெட் அசோசியேஷன்) தடை விதித்துள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஈடன் கார்டன்ஸ் பிட்ச் கொல்கத்தா அணிக்கு சாதகமாக அமையவில்லை என அதன் கேப்டன் ரஹானே ஏற்கனவே குற்றம் சுமத்தியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து போட்டிக்கு முன்பான உரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் பிரபல வர்ணனையாளர்களான ஹர்ஷா போக்லே, சைமன் டௌல் ஆகியோரும் இது குறித்து தங்களது கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார்கள்.
ஐபிஎல் போட்டிக்கான பணம் வாங்கிக்கொண்டு ஈடன் கார்டன் பிட்ச் மேற்பார்வையாளர் கேகேஆர் அணிக்கு சாதகமாக பிட்ச்சினை அமைக்காவிட்டால் அந்த அணி தனது சொந்த மைதானத்தை வேறு எங்காவது மாற்றிவிடலாம் என சைமன் டௌல் கூறினார்.
இந்த பிரச்னையால் சிஏபி 10 நாள்களுக்கு முன்பாக கேகேஆர் அணியின் சொந்த மைதானத்தில் நடைபெறும் போட்டிகளில் ஹர்ஷா போக்லே, சைமன் டௌலை தடை செய்ய வேண்டும் என கடிதம் எழுதியுள்ளார்.
இதேபோல் நேற்றிரவு (ஏப்.21) கொல்கத்தாவில் நடந்த போட்டியில் அவர்கள் இருவரும் பங்கேற்காததால் இந்தச் சர்ச்சை வழுத்தது.
கிரிக்கெட் ரசிகர்களும் சக வர்ணனையாளர்களும் இதனை கடுமையாக விமர்சித்தார்கள்.
பிசிசிஐ விதியின்படி ஐபிஎல் அணிகள் சொந்த மைதானத்தில் சாதகமாக பிட்ச்சை அமைக்கக் கூடாது எனக் கூறப்படுகிறது. அதனால்தான் இப்படி பிட்ச்சினை உருவாக்குவதாக ஈடன் கார்டன் பிட்ச் மேற்பார்வையாளர் கூறியதும் கவனிக்கத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.