சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
2025ஆம் ஆண்டு ஐபிஎல்-இன் 41-ஆவது போட்டியில் ஹைதராபாதில் உள்ள ராஜீவ் காந்தி திடலில் மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன.
டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா பெஹல்காம் மக்களுக்கு தனது வருத்தத்தை தெரிவித்தார். பின்னர், பந்துவீசுவதாக அறிவித்தார்.
மும்பை அணியில் அஷ்வனி குமாருக்குப் பதிலாக விக்னேஷ் புதூர் களமிறங்குகிறார்.
சன்ரைசரஸ் ஹைதராபாத் அணியில் ஜெயதேவ் உனத்கட் அணியில் இணைந்துள்ளார். முகமது ஷமி இம்பாக்ட் பிளேயர் லிஸ்டுக்கு தள்ளப்பட்டுள்ளார்.
சமீபகாலமாக அதிகமான ரன்களை வாரி வழங்கும் முகமது ஷமியை கழட்டி விட்டது சரியான முடிவாக இருக்குமென்றே சன்ரைசர்ஸ் ரசிகர்கள் கருதுகிறார்கள்.
சன்ரைசர்ஸ் அணி போட்டியில் வென்றாலே பெரிய விஷயமாக பார்க்கப்படும் நிலையில் இந்தப் போட்டியிலாவது 300 ரன்களை குவிக்குமா என அந்த அணியின் ரசிகர்கள் காத்து வருகிறார்கள்.
புள்ளிப் பட்டியலில் சன்ரைசர்ஸ் 9-ஆவது இடத்திலும் மும்பை இந்தியன்ஸ் 6-ஆவது இடத்திலும் இருக்கின்றன.
மும்பை அணி வென்றால் புள்ளிப் பட்டியலில் 3-ஆவது இடத்துக்குச் செல்ல வாய்ப்பிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.