லக்னௌ அணியின் கேப்டன் ரிஷப் பந்த் படம்: ஐபிஎல்
ஐபிஎல்

லக்னௌ பந்துவீச்சு: ஷர்துல் தாக்குர் நீக்கம், மும்பை அணியில் 2 மாற்றங்கள்!

மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் லக்னௌ பந்துவீச்சு...

DIN

ஐபிஎல் லீக்கின் 45-ஆவது போட்டியில் வான்கடே திடலில் நடைபெறும் மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற லக்னௌ பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

இந்தப் போட்டியில் லக்னௌ அணியில் ஷர்துல் தாக்குர் நீக்கப்பட்டு, மயங்க் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார்.

மும்பை அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மிட்செல் சான்ட்னருக்குப் பதிலாக கரண் சர்மாவும் விக்னேஷ் புதூருக்குப் பதிலாக கார்பின் போஷ் அறிமுகமாகிறார்.

புள்ளிப் பட்டியலில் 5,6-ஆவது இடங்களில் இருக்கும் மும்பை இந்தியன்ஸ், லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் இரு அணிகளுமே தலா 10 புள்ளிகளுடன் இருக்கின்றன.

இந்தப் போட்டியில் வெல்பவர்கள் தங்களது ஃபிளே ஆஃப் வாய்ப்பை அதிகப்படுத்துவார்கள். அதனால், முக்கியமான போடியாகப் பார்க்கப்படுகிறது.

மும்பை இந்தியன்ஸ்: ரியான் ரிக்கல்டன், ரோஹித் சர்மா, வில் ஜாக்ஸ், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹார்திக் பாண்டியா, நமன் திர், கார்பின் போஷ், டிரெண்ட் போல்ட், தீபக் சஹார், கரண் சர்மா

லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ்: எய்டன் மார்க்ரம், மிட்செல் மார்ஷ், நிக்கோலஸ் பூரன், ரிஷப் பந்த், அப்துல் சமத், ஆயுஷ் பதோனி, திக்வேஷ் ரதி, ரவி பிஷ்னோய், ஆவேஷ் கான், பிரின்ஸ் யாதவ், மயங்க் யாதவ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பேருந்தில் ஆவணமின்றி கொண்டு வந்த ரூ. 59 லட்சம், 4 வெள்ளிக் கட்டிகள் பறிமுதல்

கொள்ளை நிலா... ஐஸ்வர்யா ராஜேஷ்

அயோத்தி கோயில் கொடியேற்ற விழா! குடியரசுத் தலைவர், பிரதமர் பங்கேற்பு!

விழிகளில் வழிந்திடும் அழகு... குஹாசினி

ராகுல் காந்தியின் பேரணியில் இணைகிறது திரிணமூல் காங்கிரஸ்!

SCROLL FOR NEXT