க்ளென் மேக்ஸ்வெல். 
ஐபிஎல்

ஐபிஎல் தொடரில் இருந்து க்ளென் மேக்ஸ்வெல் விலகல்! பஞ்சாபுக்கு பின்னடைவா?

ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார் க்ளென் மேக்ஸ்வெல்.

DIN

ஐபிஎல் தொடரில் இருந்து பஞ்சாப் கிங்ஸ் வீரர் க்ளென் மேக்ஸ்வெல் மீதமுள்ள போட்டிகளில் விலகுவதாக தெரிவித்துள்ளார். க்ளென் மேக்ஸ்வெல் விலகியுள்ளதை பஞ்சாப் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் உறுதிபடுத்தியுள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னையில் நடைபெறும் இன்றையப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் முதலில் பந்துவீசுவதாகத் தெரிவித்துள்ளார்.

உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான க்ளென் மேக்ஸ்வெல், நடப்பு ஐபிஎல் தொடரில் சரியாக விளையாடவில்லை. சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான அவர் தேர்வு செய்யப்படுவாரா என சந்தேகங்களை ஏற்படுத்திய நிலையில், அவர் விரலில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து முழுமையாக விலகியுள்ளதாக கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் தெரிவித்தார்.

மேக்ஸ்வெல் இந்தத் தொடரில் இதுவரை 7 போட்டிகளில் விளையாடி வெறும் 48 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அதில், ஒரு சிக்ஸர் மற்றும் 5 பவுண்டரிகளை மட்டுமே அடித்துள்ளார். 13 ஓவர்கள் பந்துவீசி 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

இதையும் படிக்க: உண்மையான ஆட்டநாயகன் இவர்தான்..! பெருந்தன்மையாக நடந்துகொண்ட பிஎஸ்ஜி வீரர்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எழுத்தாளர் கி.ரா. பிறந்தநாள்: சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

புதிய உச்சத்தில் ரூ.83,000-ஐ நெருங்கிய தங்கம்! எகிறும் வெள்ளி விலை!

பரபரப்பான சூழலில் அமித் ஷாவை இன்று சந்திக்கும் இபிஎஸ்!

ரயில் பயணிகள் கனிவான கவனத்திற்கு..! அக். 1 முதல் ஐஆர்சிடிசி ஆன்லைன் டிக்கெட் முன்பதிவில் புதிய மாற்றம்!

மேட்டூர் அணை நீர்வரத்து: இன்றைய நிலவரம்!

SCROLL FOR NEXT