விராட் கோலி PTI
ஐபிஎல்

விராட் கோலி மீது வழக்குப் பதிவு!

ஆர்சிபி அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியின் மீதான வழக்குப் பதிவு குறித்து...

DIN

பெங்களூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் விபத்து காரணமாக விராட் கோலி மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

ஆர்சிபி அணி முதல்முறையாக 18 ஆண்டுகளுக்குப் பிறகு ஐபிஎல் கோப்பையை வென்றது.

இந்த வெற்றியைக் கொண்டாடும் விதமாக பெங்களூரு சின்னசாமி திடலில் கூட்டம் கூடியது. இதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியான நிலையில், 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இதுதொடர்பாக, ஏற்கனெவே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது பெங்களூரு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்நிலையில். இந்தக் கூட்ட நெரிசலுக்கும் விராட் கோலிக்கும் தொடர்பு இருப்பதாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சமூக ஆர்வலர் ஹெச்.எம். வெங்கடேஷ் என்பவர் கப்பன் பார்க் காவல் நிலையத்தில் இந்தப் புகாரை அளித்துள்ளார். இந்தப் புகாரினை ஏற்கனவே இருக்குப் புகார்களின் கீழ் விசாரிப்பதாக காவல்துறை கூறியுள்ளது.

விராட் கோலி தூண்டியதால்தான் இந்த அளவுக்கு கூட்டம் கூடியதாக அந்தப் புகாரில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மேலும் அவர் சூதாட்டத்தில் ஈடுபட்டதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட நால்வரை 14 நாள்கள் காவல்துறை சிறையில் வைத்து விசாரித்து வருகிறது.

கோலி லண்டனுக்குச் சென்றதாக தகவல் வெளியான நிலையில் இந்தப் புகாரினால் அவர் கைது செய்யப்படுவாரா என்பது கேள்வியை எழுந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாயும் ஒளி நீ... ராஷி சிங்!

உக்ரைனில் 800 ட்ரோன்கள் ஏவி ரஷியா தீவிர தாக்குதல்..!

காதல் இதயம்... தாரணி ஹெப்சிபா!

பொம்மைகளும், அதன் பாரம்பரியமும்...

'பளிச்' சருமத்துக்கு ஹைட்ரா பேஷியல்!

SCROLL FOR NEXT