ஜஸ்பிரீத் பும்ரா.  படம்: எக்ஸ் / மும்பை இந்தியன்ஸ்
ஐபிஎல்

பும்ரா இல்லாதது மிகப்பெரிய சவால்: மும்பை அணியின் பயிற்சியாளர்

காயம் காரணமாக பும்ரா விளையாடாமல் இருப்பது மும்பை அணிக்கு சவாலாக இருக்குமென ஜெயவர்தனே கூறியுள்ளார்.

DIN

காயம் காரணமாக பும்ரா விளையாடாமல் இருப்பது மும்பை அணிக்கு சவாலாக இருக்குமென அந்த அணியின் பயிற்சியாளர் ஜெயவர்தனே கூறியுள்ளார்

நடப்பு ஐபிஎல் தொடர் மார்ச்.22இல் தொடங்குகின்றன. மார்ச். 23இல் சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் அணி மோதுகிறது.

பிஜிடி தொடரின் கடைசி போட்டியில் பும்ராவுக்கு காயம் ஏற்பட்டது. 3-1 என இந்திய அணி ஆஸி.யிடம் இழந்தது.

பின்னர், சாம்பியன்ஸ் டிராபியில் அரையிறுதியில் ஆஸி.யை வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றி அசத்தியது ரோஹித் தலைமையிலான இந்திய அணி.

ஏப்ரல் மாதத்தின் முதல் வாரத்தில் மும்பை அணியுடன் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பும்ரா இல்லாதது மிகப்பெரிய சவால்

இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர் ஜெயவர்தனே கூறியதாவது:

ஜஸ்பிரீத் பும்ரா என்சிஏவில் இருக்கிறார். அவர்களது அறிக்கைக்காக நாங்கள் காத்திருக்கிறோம். தற்போதைக்கு நன்றாகவே செல்கிறது.

முன்னேற்றம் என்பது ஒவ்வொரு நாளுக்கானதாக இருக்கிறது. பும்ரா நல்ல மனநிலையில் இருக்கிறார். காயம் அவருக்கு சவாலானதாக இல்லை. உலகிலேயே சிறந்த பந்துவீச்சாளர் அவர்தான். அவர் இல்லாதது மிகப்பெரிய சவாலானது என்றார்.

கேப்டன் ஹார்திக் பாண்டியா, “ நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. எனக்கு ரோஹித், சூர்யா, பும்ரா என 3 கேப்டன்கள் இருக்கிறார்கள். உதவி தேவைப்பட்டால், அவர்கள் எப்போதும் என்னைச் சுற்றியே இருக்கிறார்கள்” என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாகிஸ்தான்: நள்ளிரவில் துப்பாக்கிச் சண்டை! 15 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

1 ரன்னில் மீண்டும் ஆட்டமிழந்த லபுஷேன்..! ஸ்மித் இல்லாமல் தடுமாறும் ஆஸி.!

வார இறுதி நாள்களை வீணாக்குகிறீர்களா? இந்த 5 வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்!

சமயபுரம் மாரியம்மன் கோயில் தங்க நகைகளை அளவிடும் பணி தொடக்கம்

வார பலன்கள் - ரிஷபம்

SCROLL FOR NEXT