ஹார்திக் பாண்டியா படங்கள்: எக்ஸ் / மும்பை இந்தியன்ஸ்
ஐபிஎல்

ஹார்திக் பாண்டியா 100% மரியாதைக்கு தகுதியானவர்..!

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹார்திக் குறித்து...

DIN

ஹார்திக் பாண்டியா கடந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டது ரோஹித் சர்மா ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. அதனால் அவர் பலவாறு கிண்டல்களுக்கு உள்ளானார்.

அதைத் தொடர்ந்து, டி20 உலகக் கோப்பை சாம்பியன்ஸ் டிராபியில் ஹார்திக் சிறப்பாக விளையாடி நன்மதிப்பை மீட்டார்.

தற்போது, ஐபிஎல் முதல் போட்டியாக சிஎஸ்கே அணியை சேப்பாக்கில் சந்திக்கிறது மும்பை இந்தியன்ஸ் அணி.

முதல் போட்டியில் ஹார்திக் விளையாடமாட்டார். சூர்யகுமார் கேப்டனாக இருப்பார்.

100 சதவிகிதம் மரியாதைக்கு தகுதியானவர்

இந்நிலையில் மும்பை அணியின் பயிற்சியாளர் மார்க் பௌச்சர் கூறியதாவது:

கடந்த சீசன் ஹார்திக் பாண்டியாவுக்கு மிகவும் கடினமாக இருந்தது. ஒவ்வொரு முறையும் பாண்டியா ஃபீல்டிங்கிற்கு செல்லும்போது ரசிகர்களால் கிண்டல் செய்யப்பட்டார். ஆனால், அவருக்கு 100 சதவிகிதம் மரியாதைக்கு தகுதியானவர்.

ஒரு கிரிக்கெட்டராக யாருக்கும் அப்படி நடக்கக்கூடாது. ஆனால், அவர் அதை சிறப்பாக கையாண்டார். ஹார்திக் பாண்டியா கடினமான மனிதர்.

அவர் கடினமான சூழ்நிலையில் மின்னும் கிரிக்கெட்டர். காயம், குடும்பப் பிரச்னை, என பல பிரச்னைகளில் இருந்தார். ஆனால், அதையெல்லாம் தாண்டி சாதனகளைப் படைத்தார்.

பாண்டியா தன்னம்பிக்கையானவர் ஹர்பஜன் புகழாரம்

கிரிக்கெட்டில் சிறந்தவர்களாக கடினமான சூழ்நிலைகளை தாண்ட வேண்டும். அவர் அதைச் செய்திருக்கிறார்.

ஹார்திக் ஃபீல்டிங்கின்போது ஐபிஎல் நன்றாக இருக்கிறது. ஐபிஎல் மட்டுமல்ல கிரிக்கெட்டுமே நன்றாக இருக்கிறது.

பாண்டியா மிகவும் தன்னம்பிக்கையான வீரர். மிகவும் நேர்மறையாக சிந்திப்பவர்.

அவரால் எதையும் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கை உடையவர். அதுதான் அவரை மற்றவர்களிடம் இருந்து வித்தியாசப்படுத்துகிறது என ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓபிஎஸுக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி!

பாஜகஉறவு முறிந்தது! கூட்டணியில் இருந்து விலகுவதாக ஓபிஎஸ் அணி அறிவிப்பு!-பண்ருட்டி ராமச்சந்திரன்

அறிவுசார் திட்டம் என்றாலே ஆக்கிரமிப்பு! ஆற்றுப்படுகையில் எதற்கு அரசின் திட்டங்கள்?அன்புமணி பேச்சு!

அரசின் ஏவல் படையா, அமலாக்கத் துறை? அதிகாரப்பூர்வ தகவலைப் பகிர்ந்து திரிணாமுல் எம்.பி. கேள்வி!

இந்த வார ஓடிடி படங்கள்!

SCROLL FOR NEXT