மொயின் அலி  படம்: எக்ஸ் / கேகேஆர்
ஐபிஎல்

மொயின் அலிக்கு பாராட்டு..! கேகேஆர் கேப்டன் நெகிழ்ச்சி!

கேகேஆர் அணியின் கேப்டன் ரஹானே மொயின் அலி குறித்து பேசியதாவது...

DIN

மொயின் அலி பந்துவீசிய விதம் பிடித்திருந்ததாக கேகேஆர் அணியின் கேப்டன் ரஹானே தெரிவித்துள்ளார்.

ஐபிஎல்-இன் 6ஆவது ஆட்டத்தில் ராஜஸ்தானுடன் கொல்கத்தா அணி மோதியது. இதில் கேகேஆர் அணியின் கேப்டன் ரஹானே டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

இதில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 151/9 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்து விளையாடிய கேகேஆர் 17.3 ஓவர்களில் 153 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 

இதில் சுனில் நரைனுக்குப் பதிலாக கேகேஆர் அணியில் இணைந்த மொயின் அலி 4 ஓவர்களில் 23 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இது குறித்து கேப்டன் ரஹானே பேசியதாவது:

மொயின் அலி தனது வாய்ப்பினை சரியாகப் பயன்படுத்தி பந்துவீசினார். எங்களது பந்துவீச்சு அணிக்கு பாராட்டு தெரிவிக்க வேண்டும். குறிப்பாக மொயின் அலிக்கு கூடுதல் பாராட்டுகள்.

எங்கள் அணிக்கு முழுமையான சுதந்திரம் இருக்கிறது. மொயின் அலி ஏற்கனவே தொடக்க வீரராகவும் களமிறங்கியுள்ளார். பேட்டிங்கில் சரியாக அமையாவிட்டாலும் பந்துவீச்சில் அசத்தினார்.

ஒவ்வொரு போட்டியும் சவால் மிக்க ஒன்றாகவும் கற்றுக்கொள்ள வாய்ப்பினையும் வழங்குகிறது.

சுனில் நரைனுக்குப் பதிலாக யாரையும் மாற்றுவீரராக சேர்க்க முடியாது. ஆனால், நான் சரியான வீரரை அணியில் சேர்த்தேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“தமிழக உரிமைகளை அடகு வைக்காத தலைவர் மு.க.ஸ்டாலின்!” திமுகவில் இணைந்த மனோஜ் தங்கராஜ் பேட்டி!

ரிலாக்ஸ்... ரேஷ்மா பசுபுலேட்டி!

விஜே பார்வதிக்கு சரியான போட்டியாளர் திவ்யா கணேசன்! ரசிகர்கள் கருத்து

தெலங்கானா அமைச்சரவையில் அசாருதீனுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு!

கோவிலுமல்ல, சிற்பமுமல்ல... ஆனியா!

SCROLL FOR NEXT