ஐபிஎல்

சாரா அலி கான் நடனத்துடன் தொடங்கும் சென்னை - ராஜஸ்தான் போட்டி!

சென்னை - ராஜஸ்தான் போட்டிக்கு முன்னதாக நடைபெறும் சாரா அலிகானின் நடன நிகழ்ச்சி பற்றி...

DIN

முன்னாள் சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதும் போட்டிக்கு முன்னதாக பாலிவுட் நடிகை சாரா அலிகானின் நடன நிகழ்ச்சி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் 18-ஆவது சீசன் கடந்த 22 ஆம் தேதி கொல்கத்தாவில் கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்றுவருகிறது. சிஎஸ்கே அணி தனது முதல் போட்டியில் மும்பையை வீழ்த்திய நிலையில், இரண்டாவது போட்டியில் இன்று பெங்களூருவை எதிர்கொள்கிறது.

இந்த நிலையில், வருகிற மார்ச் 30 ஆம் தேதி அஸ்ஸாம் தலைநகர் குவாஹாட்டியில் நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்தப் போட்டிக்கு முன்னதாக திடலில் மாலை 6.30 மணியளவில் நடிகை சாரா அலிகானின் நடன நிகழ்ச்சி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே - மும்பை இந்தியன்ஸ் போட்டிக்கு முன்னதாக இசையமைப்பாளர் அனிருத் நிகழ்ச்சியும், ஹைதராபாத் - லக்னௌ போட்டியில் இசையமைப்பாளர் தமன் இன்னிசை நிகழ்ச்சியும் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அசிஸ்டென்ட் மெடிக்கல் ஆபீஸர் பணி: விண்ணப்பிக்க நாளை கடைசி

ஜாய் கிரிஸில்டாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் வழக்கு!

இனி அதிமுக அல்ல, எதிமுக! - TTV Dhinakaran

750 தாமரைகள் கொண்ட மணல் சிற்பம்: பிரதமர் மோடிக்கு பட்நாயக் வாழ்த்து!

Jailer 2 ரிலீஸ் குறித்து Rajinikanth!

SCROLL FOR NEXT