படம் | தில்லி கேபிடல்ஸ் (ஐபிஎல்)
ஐபிஎல்

சன்ரைசர்ஸின் அதிரடியை கட்டுப்படுத்துவோம்: தில்லி கேபிடல்ஸ் இளம் வீரர்

சன்ரைசர்ஸ் ஹைதராபாதின் அதிரடியை கட்டுப்படுத்துவோம் என தில்லி கேபிடல்ஸின் இளம் வீரர் தெரிவித்துள்ளார்.

DIN

சன்ரைசர்ஸ் ஹைதராபாதின் அதிரடியை கட்டுப்படுத்துவோம் என தில்லி கேபிடல்ஸின் இளம் வீரர் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் அண்மையில் தொடங்கி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இதுவரை 8 போட்டிகள் நிறைவடைந்துள்ளன. இன்றையப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.

விசாகப்பட்டினத்தில் நாளை (மார்ச் 30) நடைபெறும் முதல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் தில்லி கேபிடல்ஸ் அணிகள் மோதவுள்ளன.

சன்ரைசர்ஸை கட்டுப்படுத்துவோம்

சன்ரைசர்ஸுக்கு எதிரான போட்டியில் நாளை விளையாடவுள்ள நிலையில், அந்த அணியின் அதிரடியான ஆட்டத்தைக் கட்டுப்படுத்த தங்களிடம் சிறப்பான திட்டங்கள் இருப்பதாக தில்லி கேபிடல்ஸின் இளம் ஆல்ரவுண்டர் விப்ராஜ் நிகம் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மிகவும் சிறப்பான அணி. அவர்களிடம் சிறந்த பேட்டிங் வரிசை இருக்கிறது. ஆனால், எங்களது அணியில் நிறைய ஆலோசனை மேற்கொண்டுள்ளோம். சன்ரைசர்ஸுக்கு எதிராக பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட பயிற்சி மேற்கொண்டுள்ளோம். எங்களிடம் உள்ள சிறப்பான திட்டங்களை போட்டியின்போது செயல்படுத்தி, சன்ரைசர்ஸ் ஹைதராபாதின் அதிரடியைக் கட்டுப்படுத்துவோம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருக்கலைப்பு செய்யத் தூண்டும் வக்கிரம் பெற்ற கிரகங்கள்!

மக்கள் பணியில் பங்கு கேட்டால் சதியாகுமா? மாணிக்கம் தாகூர் கேள்வி!

தூர்தர்ஷனின் மூத்த தொகுப்பாளர் சரளா மகேஷ்வரி காலமானார்!

பிப். 13 விஷ்ணுபதி புண்ணிய காலம்!

பங்குச்சந்தை: ஐடி பங்குகள் 5% சரிவு! ரூ. 3 லட்சம் கோடி இழப்பு! ஏன்?

SCROLL FOR NEXT