மும்பை இந்தியன்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸ் அணி நேற்று இரவு (மார்ச்.29) அஹமதாபாத்தில் மோதியது.
இந்தப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து 196 ரன்கள் அடிக்க அடுத்து விளையாடிய மும்பை 160/6 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இறுதியில் 36 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது. இந்த சீசனில் 2ஆவது முறையாக மும்பை இந்தியன்ஸ் தோல்வியைத் தழுவியது.
இந்தப் போட்டியில் மும்பை கேப்டன் ஹார்திக் பாண்டியாவுடன் குஜராத் அணி வீரர் சாய் கிஷோர் மோதலில் ஈடுபட்டார்கள்.
15ஆவது ஓவரில் முதலிரண்டு பந்துகளில் ரன்களேதுமின்றி இருக்க 3ஆவது பந்தில் பாண்டியா பவுண்டரி அடிப்பார்.
4ஆவது பந்தினை டாட் செய்யவும் இருவரும் முறைக்க ஆரம்பித்தனர்.
ஹார்திக் பாண்டியாவும் சாய் கிஷோரும் ஒருவரை ஒருவர் முன்னோக்கி வர நடுவர் இருவரையும் பிரிக்க ஓடி வருவார்.
அதற்குள்ளாக ஹார்திக் பாண்டியா சாய் கிஷோரை ”கிளம்பு” என்பதுபோல சைகை காண்பிப்பார். அதற்கு சாய் கிஷோர் முறைத்துக்கொண்டே இருப்பார். இந்த விடியோ வைரலாகி வருகிறது.
போட்டி முடிந்த பிறகு இருவரும் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்துக் கொண்டனர்.
இது குறித்து போட்டி முடிந்தபிறகு சாய் கிஷோர் பேசியதாவது:
ஹார்திக் எனக்கு நல்ல நண்பர். களத்தினுள் அப்படித்தான் இருப்போம். ஆனால், இதை தனிப்பட்ட விதத்தில் எடுத்துச்செல்ல மாட்டோம்.
இன்று எனக்கு பெரிதாக அழுத்தம் இல்லை. அதனால், தற்காக்கும் விதமாகவே பந்தினை வீசி அணிக்கு உதவினேன். பிட்ச்சை பார்ப்பதற்குவிட நன்றாக வேலை செய்தது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.