விக்னேஷ் புதூர் படம்: எக்ஸ் / மும்பை இந்தியன்ஸ்
ஐபிஎல்

ஐபிஎல் தொடரிலிருந்து விக்னேஷ் புதூர் விலகல்: மாற்று வீரர் அறிவிப்பு!

மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம் வீரர் விக்னேஷ் புதூர் ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார்.

DIN

மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம் வீரர் விக்னேஷ் புதூர் ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார்.

காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து இளம் சுழல்பந்து வீச்சாளர் விக்னேஷ் புதுர் விலகியதாக 5 முறை கோப்பை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி தெரிவித்துள்ளது.

கேரளத்தைச் சேர்ந்த இளம் வீரர் (24) விக்னேஷ் புதூர் சிஎஸ்கே அணிக்கு எதிராக அறிமுகமாகிய சிறப்பாக பந்து வீசினார்.

கடைசி சில போட்டிகளில் சுமாராக பந்துவீசினாலும் இந்திய ரசிகர்களிடையே நல்ல கவனத்தை ஈர்த்தவர் தற்போது மும்பை இந்தியன்ஸ் மருத்துவ கண்காணிப்பில் இருக்கிறார்.

தற்போது, விக்னேஷ் புதூருக்குப் பதிலாக 31 வயது ரகு சர்மா அணியில் இணைந்துள்ளார்.

வலது கை சுழல்பந்து (லெக் ஸ்பின்னர்) வீச்சாளரான ரகு சர்மா மும்பை அணியின் பந்துவீச்சு குழுவில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் ரகு சர்மா பஞ்சாப், புதுச்சேரி அணிகளுக்காக விளையாடியுள்ளார்.

11 முதல்தர போட்டிகளில் 57 விக்கெட்டுகளும் 3 டி20 போட்டிகளில் 3 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மிதுன ராசிக்கு மனகுழப்பம் தீரும்: தினப்பலன்கள்!

உற்பத்தித் துறையில் 16 மாதங்கள் காணாத வளா்ச்சி

மாமல்லபுரத்தில் கைவினைப் பொருள்கள் கண்காட்சி

ஆடி வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற 80 சதவீத மாணவா்கள் உயா்கல்வியில் சோ்க்கை

SCROLL FOR NEXT