விராட் கோலி படம் | ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (எக்ஸ்)
ஐபிஎல்

ஐபிஎல் இந்த அளவுக்கு வளருமென ஒருபோதும் நினைக்கவில்லை: விராட் கோலி

ஐபிஎல் தொடரின் வளர்ச்சி குறித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வீரர் விராட் கோலி பேசியுள்ளார்.

DIN

ஐபிஎல் தொடரின் வளர்ச்சி குறித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வீரர் விராட் கோலி பேசியுள்ளார்.

ஐபிஎல் தொடர் கடந்த 2008 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு, இதுவரை 17 சீசன்கள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், ஐபிஎல் தொடரின் அறிமுகம் குறித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர் விராட் கோலி மனம் திறந்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக ஜியோஹாட்ஸ்டாரில் அவர் பேசியதாவது: ஐபிஎல் தொடர் அறிமுகமான ஆண்டு மிகவும் உற்சாகமாக இருந்தது. நிறைய எதிர்பாராத விஷயங்கள் நடந்தன. அப்போது நாங்கள் அதிகம் டி20 போட்டிகளில் விளையாடியிருக்கவில்லை. உலகின் பல்வேறு நாடுகளிலுள்ள கிரிக்கெட் வீரர்களுடன் இணைந்து விளையாடும் வாய்ப்பு கிடைத்தது.

ஐபிஎல் ஏலம் நடைபெற்றபோது, நாங்கள் மலேசியாவில் இருந்தோம். நாங்கள் முதல் தர கிரிக்கெட்டர்கள் வரிசையில் ரூ.20 லட்சத்துக்கான ஏலத்தில் இடம்பெற்றோம். எங்களுக்கு 20 லட்சம் கிடைத்ததை நினைத்து மகிழ்ச்சியாக இருந்தோம். மிகவும் உணர்ச்சிகரமான தருணமாக அது இருந்தது. ஏனெனில், கோலாகலமான தொடக்க விழா, மிகப் பெரிய கிரிக்கெட் வீரர்களுடன் சந்திப்பு என மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தோம்.

ஐபிஎல் பயணம் மிகவும் நீண்ட பயணமாக இருந்துள்ளது. நாங்கள் இளம் வீரர்களாக ஐபிஎல் தொடரில் இணைந்தோம். சிறந்த கிரிக்கெட் வீரர்களுடன் இணைந்து விளையாடினோம். இளம் வீரர்களாக அறிமுகமான நாங்கள் அனுபவம் வாய்ந்த வீரர்களாக வளர்ந்தோம்.

நேர்மையாக கூறவேண்டுமென்றால், ஐபிஎல் தொடர் அறிமுகப்படுத்தப்பட்டபோது, இந்த அளவுக்கு ஐபிஎல் வளர்ச்சியடையும் என ஒருபோதும் நினைக்கவில்லை. ஆனால், ஐபிஎல் தொடரின் 18-வது சீசனில் இருக்கிறோம். ஒவ்வொரு ஆண்டும் உற்சாகம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஐபிஎல் தொடருக்கான ஏற்பாடுகள், நடத்தப்படும் விதம், அணிகளுக்கு இடையேயான கடும் போட்டி இந்த தொடரை மிகவும் விரும்பத்தக்கதாக மாற்றியுள்ளது என்றார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி 443 ரன்கள் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேசன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

SCROLL FOR NEXT