வில் ஜாக்ஸ் படம் | AP
ஐபிஎல்

வில் ஜாக்ஸ் அரைசதம்; குஜராத் டைட்டன்ஸுக்கு 156 ரன்கள் இலக்கு!

குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் 8 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் எடுத்துள்ளது.

DIN

குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் 8 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் எடுத்துள்ளது.

ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே திடலில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, மும்பை இந்தியன்ஸ் முதலில் விளையாடியது.

வில் ஜாக்ஸ் அரைசதம்; 156 ரன்கள் இலக்கு

முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் சர்மா 7 ரன்களிலும், ரியான் ரிக்கல்டான் 2 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். அதன் பின், வில் ஜாக்ஸ் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தது.

இருப்பினும், சூர்யகுமார் யாதவ் 24 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 5 பவுண்டரிகள் அடங்கும். மறுமுனையில் அதிரடியாக விளையாடிய வில் ஜாக்ஸ் அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 35 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். அதன் பின் களமிறங்கிய திலக் வர்மா 7 ரன்கள், கேப்டன் ஹார்திக் பாண்டியா ஒரு ரன், நமன் திர் 7 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

இறுதிக்கட்டத்தில் நிதானமாக விளையாடிய கார்பின் போஸ்ச் 22 பந்துகளில் 27 ரன்கள் எடுத்தார். அதில் ஒரு பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும்.

குஜராத் டைட்டன்ஸ் தரப்பில் சாய் கிஷோர் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். முகமது சிராஜ், அர்ஷத் கான், பிரசித் கிருஷ்ணா, ரஷித் கான் மற்றும் ஜெரால்டு கோட்ஸீ தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி குஜராட் டைட்டன்ஸ் அணி விளையாடி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உலகின் கடைசி சாலை முடியும் இடம்! அதைத் தாண்டி நிலப்பரப்பே இல்லையாம்!!

சுதாகர் ரெட்டி மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

நள்ளிரவில் உத்தரகண்டை புரட்டிப்போட்ட வெள்ளம்! 2 பேர் மாயம்!

கேரளத்துக்கு வரும் மெஸ்ஸி தலைமையிலான ஆர்ஜென்டீனா! அதிகாரபூர்வ அறிவிப்பு!

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT