தேவ்தத் படிக்கல், மயங்க் அகர்வால்.  படங்கள்: எக்ஸ் / ஆர்சிபி
ஐபிஎல்

12 ஆண்டுகளுக்குப் பிறகு ஆர்சிபி அணியில் மயங்க் அகர்வால்..! தேவ்தத் படிக்கல் விலகல்!

ஆர்சிபியின் நட்சத்திர வீரர் தேவ்தத் படிக்கல் நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார்.

DIN

ஆர்சிபியின் நட்சத்திர வீரர் தேவ்தத் படிக்கல் நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார்.

படிக்கல் இந்த சீசனில் 10 போட்டிகளில் 247 ரன்கள் குவித்துள்ளார். மற்ற எல்லா சீசன்களைவிடவும் இந்தமுறை படிக்கல் சிறப்பாக விளையாடி வந்தார்.

இந்நிலையில், பின் தொடை தசைநார்களில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்தத் தொடரில் இருந்து விலகியுள்ளார்.

ஆர்சிபி அணி புள்ளிப் பட்டியலில் 16 புள்ளிகளுடன் 2-ஆம் இடத்தில் இருக்கிறது.

ஐபிஎல் தொடரில் 127 போட்டிகள் விளையாடியுள்ள மயங்க் அகர்வால் 2,661 ரன்கள் எடுத்துள்ளார்.

ஆர்சிபி அணிக்கு இன்னும் 3 போட்டிகள் மீதமிருக்கின்றன. லக்னௌ, சன்ரைசர்ஸ், கொல்கத்தா அணிகளுடன் முறையே மே 9,13,17ஆம் தேதிகளில் விளையாட இருக்கிறது.

12 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்த அணியான ஆர்சிபி அணியில் மயங்க் அகர்வால் இணைந்துள்ளார்.

இடது கை பேட்டரான தேவ்தத் படிக்கலுக்குப் பதிலாக வலதுகை பேட்டரான மயங்க் அகர்வால் எவ்வாறு செயல்படுவாரென ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மானாமதுரையில் இன்று மின் தடை

சிறுநீரக மோசடி: தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்தது உயா்நீதிமன்றம்

பஜாஜ் ஃபைனான்ஸ் கடனளிப்பு 27% உயா்வு

அக்டோபரில் 5 மாத உச்சம் தொட்ட பெட்ரோல் விற்பனை

பந்தன் வங்கியின் வருவாய் ரூ.1,310 கோடியாகச் சரிவு

SCROLL FOR NEXT