பஹல்காம் தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின் மூலமாக இந்தியா தனது பதிலடியைக் கொடுத்து வருகிறது.
இதன் எதிரொலியாக வியாழக்கிழமை இரவு வடக்கு, மேற்கு இந்தியாவின் எல்லையோர மாநிலங்களின் 15 நகரங்களில் உள்ள ராணுவத் தளங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் நடத்திய ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்களை இந்தியா வெற்றிகரமாக முறியடித்தது.
நேற்றிரவு பஞ்சாப் -தில்லி போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. ஐபிஎல் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டதாகவும் பிடிஐ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சிஎஸ்கே அணி எம்.எஸ்.தோனியின் வாசகத்தை பதிவாக வெளியிட்டுள்ளது. அந்தப் பதிவில், “நாடுதான் முதன்மையானது. மற்ற விஷயங்கள் எல்லாம் காத்திருக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளது.
மேலும் அந்தப் பதிவில், “ஓவ்வொரு அடியிலும் தைரியம். ஒவ்வொரு துடிப்பிலும் பெருமை. நமது ராணுவத்துக்கு சல்யூட்!” எனவும் பதிவிட்டுள்ளது.
இந்த வசனத்தை எம்.எஸ்.தோனி தனது குழந்தையைப் பார்க்கச் செல்லாமல் இந்திய அணிக்காக கிரிக்கெட் விளையாடும்போது கூறியவை என்பது கவனிக்கத்தக்கது.
இந்த சீசனில் சுமாராக விளையாடிய சிஎஸ்கே பிளே ஆஃப் தகுதியை இழந்தாலும் கடைசி நேரத்தில் இளம் வீரர்களை களமிறக்கி சிறப்பாக விளையாடி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.