ஐபிஎல் போஸ்டர். 
ஐபிஎல்

இது நடந்தால் யாருமே பிளே ஆஃப்ஸுக்கு தகுதிபெற முடியாது..! அதிகரிக்கும் சுவாரசியங்கள்!

ஐபிஎல் 2025 பிளே ஆஃப்ஸுக்கான வாய்ப்புகள் குறித்து...

DIN

ஐபிஎல் 2025 போட்டிகள் மீண்டும் தொடங்கியுள்ளன. போர்ப் பதற்றம் காரணமாக நிறுத்தப்பட்ட போட்டிகள் நேற்று (மே.17) முதல் தொடங்கப்பட்டன.

மழையின் காரணமாக ஆர்சிபி, கேகேஆர் போட்டிகள் கைவிடப்பட்டது. இதனால், நடப்பு சாம்பியன் கேகேஆர் அணி ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியது. ஆர்சிபி அடுத்த சுற்றுக்கான விளிம்பில் இருக்கிறது.

இதுவரை 58 போட்டிகள் முடிவடைந்தும் இதுவரை எந்த அணியும் பிளே ஆஃப்ஸுக்கு தகுதிபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இன்றும் குறிப்பிட்ட 2 அணிகள் வென்றால் யாருமே பிளே ஆஃப்ஸுக்கு தகுதிபெற முடியாது என்பது கூடுதல் சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இன்று மதியம் ராஜஸ்தான் ராயல்ஸ்- பஞ்சாப் அணியும், இரவு தில்லி- குஜராத் அணிகள் மோதுகின்றன.

இந்த வாய்ப்புகள் குறித்து ஸ்டார்ஸ்போர்ட்ஸ் இந்தியா தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

1. ராஜஸ்தான் பஞ்சாபை வென்றால்... ஆர்சிபி தகுதிபெறும்.

2. குஜராத் தில்லியை வென்றால்... குஜராத், ஆர்சிபி தகுதிபெறும்.

3. பஞ்சாப், குஜராத் வென்றால்... பஞ்சாப், ஆர்சிபி, குஜராத் தகுதிபெறும்.

4. பஞ்சாப், தில்லி வென்றால்... எந்த அணியும் தகுதிபெற முடியாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லையில் மதுபோதையில் நண்பரைக் கொன்றவர் கைது!

கோவை சுட்டுப் பிடிப்பு சம்பவம்: காவலருக்கு அரிவாள் வெட்டு!

இந்திய கிரிக்கெட் வீராங்கனை தீப்தி சர்மா டிஎஸ்பி-யாக நியமனம்!

புகையிலை இல்லா சமுதாயம் உருவாக்க உறுதிமொழி ஏற்பு

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, புறநகரில் மழை!

SCROLL FOR NEXT