தோனியிடம் ஆசீர்வாதம் பெற்ற 14 வயது வீரர் சூர்யவன்ஷி. படம்: எக்ஸ் / ராஜஸ்தான் ராயல்ஸ்
ஐபிஎல்

தோனியிடம் ஆசீர்வாதம் பெற்ற 14 வயது வீரர் சூர்யவன்ஷி..! வைரல் விடியோ!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீரர் சூர்யவன்ஷி தோனியிடம் ஆசீர்வாதம் பெற்றது குறித்து...

DIN

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீரர் சூர்யவன்ஷி தோனியின் காலைத் தொட்டு வணங்கிய விடியோ வைரலாகி வருகிறது.

நேற்றிரவு (மே.20) தில்லியில் நடைபெற்ற போட்டியில் சிஎஸ்கே முதலில் பேட்டிங் செய்து 187 ரன்கள் சேர்க்க, ராஜஸ்தான் அணி 17.1 ஓவரில் 188 ரன்கல் எடுத்து அபார வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் ராஜஸ்தான் அணியின் இளம் வீரர் (14) வைபவ் சூர்யவன்ஷி 33 பந்துகளில் 57 ரன்கள் எடுத்தார்.

தன்னால் அதிரடியாக மட்டுமில்லாமல் பொறுமையாகவும் ஆட முடியுமென சூர்யவன்ஷி காட்டினார்.

போட்டி முடிந்தபிறகு ஒவ்வொரு வீரரும் கை குலுக்கும்போது வைபவ் சூர்யவன்ஷி சிஎஸ்கே கேப்டன் தோனியின் காலைத் தொட்டுக் கும்பிட்டார்.

தோனி அவரது கையைப் பிடித்து சிரித்தபடியே பாராட்டிச் சென்றார்.

இந்த விடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன. ஐபிஎல் சீசனில் மிகவும் இளம் வீரராக சூர்யவன்ஷி இருக்க வயதான வீரராக எம்.எஸ்.தோனி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

ராஜஸ்தான், சிஎஸ்கே இரண்டு அணிகளுமே பிளே ஆஃப்ஸுக்கு தகுதிபெறாத நிலையில் இந்த வெற்றியால் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இல்லாமல் ராஜஸ்தான் அணியினால் தப்பிக்க முடிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்க கைது!

பாலியல் குற்றச்சாட்டும் ஓடிடி வெளியீடும்... டாம் சாக்கோவின் சூத்ரவாக்யம்!

ஆப்பிள் ஐஃபோன் 16 ப்ரோ மேக்ஸ் விலையில் ரூ.17,000 தள்ளுபடியா? அமேஸான் அறிவிப்பு

தாக்குதலுக்குப் பின் முதல்முறையாக நிகழ்ச்சியில் பங்கேற்கும் ரேகா குப்தா!

சதத்தை தவறவிட்ட 2 தெ.ஆ. வீரர்கள்: ஆஸி. வெற்றிபெற 278 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT