விராட் கோலியின் சாதனைகள்  படம்: எக்ஸ் / ஆர்சிபி
ஐபிஎல்

ஆர்சிபிக்காக 9,000 ரன்கள்: ஐபிஎல் வரலாற்றில் அதிக அரைசதமடித்து சாதித்த விராட் கோலி!

ஐபிஎல் தொடரில் அதிகமாக அரைசதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் விராட் கோலி முதலிடம் பிடித்துள்ளார்.

DIN

ஐபிஎல் தொடரில் அதிகமாக அரைசதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் விராட் கோலி முதலிடம் பிடித்துள்ளார்.

விராட் கோலி ஐபிஎல் தொடரில் 265 போட்டிகளில் 8,606 ரன்கள் குவித்துள்ளார். இதில் 63 அரைசதங்கள், 8 சதங்களும் அடங்கும்.

லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிராக அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார்.

இந்த அரைசதத்தின் மூலம் 18 ஐபிஎல் சீசன்களிலும் சேர்த்து அதிக அரைசதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் விராட் கோலி வார்னரை முந்தி முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

அதிக அரைசதங்கள் அடித்தவர்கள்

1. விராட் கோலி - 256 இன்னிங்ஸ் - 63 அரைசதங்கள்

2. டேவிட் வார்னர் - 184 இன்னிங்ஸ் - 62 அரைசதங்கள்

3. ஷிகர் தவான் - 221 இன்னிங்ஸ் - 51 அரைசதங்கள்

4. ரோஹித் சர்மா - 265 இன்னிங்ஸ் - 46 அரைசதங்கள்

5. கே.எல்.ராகுல் - 136 இன்னிங்ஸ் - 40 அரைசதங்கள்

ஆர்சிபிக்காக 9,000 ரன்கள்

இதுமட்டுமில்லாமல் விராட் கோலி ஆர்சிபிக்காக 9,000 ரன்களை கடந்து (9,030) சாதனை படைத்துள்ளார்.

ஐபிஎல் போட்டிகளில் 8,606 ரன்களும் சிஎல்டி20 போட்டிகளில் 424 ரன்களும் ஆர்சிபிக்காக எடுத்துள்ளார்.

ஆர்சிபி அணியின் அடையாளமாக இருக்கும் விராட் கோலி தலைமையில் ஐபிஎல் கோப்பை வெல்லாதது மட்டுமே ஒரே குறையாக இருந்து வருகிறது.

தற்போது, ரஜத் படிதார் தலைமையில் ஐபிஎல் கோப்பையை கோலி வெல்லுவார் என அதன் ரசிகர்கள் ஆவலுடன் காத்துவருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செதுக்கி வச்ச தேர் அழகு... கிருஷ்ணா ஷில்பா!

கூட்டணி ஆட்சி குறித்து தெளிவுபடுத்திய நயினார் நாகேந்திரன்!

இளைஞா் நீதிக் குழும உறுப்பினா் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு

கூப்பர் கானோலி 5 விக்கெட்டுகள்: 276 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி. வெற்றி!

ஹைட்ரோகார்பன் திட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும்: முதல்வருக்கு ஜவாஹிருல்லா கோரிக்கை

SCROLL FOR NEXT