முகப்பு
கோப்புப்படம்
ஐபிஎல்

டி வில்லியர்ஸ் மீண்டும் மிரட்டல்: 194 ரன்கள் குவித்த ஆர்சிபி

கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 194 ரன்கள் குவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:36 PM
கோப்புப்படம்
பகிர்:

கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 194 ரன்கள் குவித்துள்ளது.

13-வது ஐபிஎல் சீசனின் இன்றைய (திங்கள்கிழமை) ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற விராட் கோலி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

பெங்களூருவுக்கு பின்ச் இந்த முறை நல்ல தொடக்கம் தந்தார். படிக்கல்லும் சிறப்பாக விளையாட பவர் பிளே முடிவில் பெங்களூரு அணி விக்கெட் இழப்பின்றி 47 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து, ரன் ரேட்டை உயர்த்த படிக்கல் அதிரடிக்கு மாறத் தொடங்கினார். இந்த நிலையில் ரஸல் வேகத்தில் போல்டானார் படிக்கல் (32 ரன்கள்).

தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் கோலி பின்ச்சுடன் இணைந்து பவுண்டரிகளாக அல்லாமல் ஓடியே ரன்களை எடுத்தார். இந்த இணை சற்று தாக்குப்பிடித்து விளையாடியது. அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பின்ச் 47 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

இதன்பிறகு, டி வில்லியர்ஸ் ஆட்டம்தான். டி வில்லியர்ஸ் வருகை வரை பெங்களூரு பேட்ஸ்மேன்கள் பவுண்டரிகள் அடிக்கத் திணறினர். ஆனால், டி வில்லியர்ஸ் எளிதாக பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் பறக்கவிட்டார். இதனால், ரன் ரேட் மளமளவென உயர்ந்தது. டி வில்லியர்ஸும் 23-வது பந்திலேயே அரைசதத்தை எட்டினார்.

இதையடுத்து, கோலியும் கடைசி கட்டத்தில் அதிரடி ஆட்டத்துக்கு மாறினார். 8-வது ஓவரில் களமிறங்கிய கோலி 19-வது ஓவரில்தான் தனது முதல் பவுண்டரியை அடித்தார்.

அரைசதம் அடித்த பிறகும் டி வில்லியர்ஸ் கடைசி ஓவரில் அதிரடி காட்டினார். 1 சிக்ஸரும், 1 பவுண்டரியும் அடிக்க அந்த ஓவரில் 17 ரன்கள் கிடைத்தன.

இதன்மூலம், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பெங்களூரு அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 194 ரன்கள் குவித்துள்ளது. 

கோலி 28 பந்துகளில் 33 ரன்களுடனும், டி வில்லியர்ஸ் 33 பந்துகளில் 73 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 

முழு கட்டுரையைப் படிக்க →