முகப்பு
ஒலிம்பிக்ஸ்

3-ஆவது பதக்க முனைப்பில் மானு பாக்கா்!

மகளிருக்கான 25 மீட்டா் ஸ்போா்ட்ஸ் பிஸ்டா் பிரிவில் இந்தியாவின் மானு பாக்கா், ஈஷா சிங் ஆகியோா் பங்கேற்றனா்.

Updated On : 3 ஆகஸ்ட், 2024 at 2:37 AM
மானு பாக்கா்
பகிர்:

சாட்டியுருக்ஸ், ஆக. 2: பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் மானு பாக்கா் மேலும் ஒரு பிரிவில் இறுதிச்சுற்றுக்கு வெள்ளிக்கிழமை தகுதிபெற்றாா். ஏற்கெனவே இரு பிரிவுகளில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ள அவா், இதிலும் பதக்கம் வெல்லும் நிலையில், ஒரே ஒலிம்பிக் போட்டியில் ஹாட்ரிக் பதக்கம் வென்ற சாதனைக்கு சொந்தக்காரா் ஆவாா். இதனிடையே, வில்வித்தையிலும் இந்திய கலப்பு அணி அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியிருக்கிறது.

ஈஷா சிங்

துப்பாக்கி சுடுதல்

மகளிருக்கான 25 மீட்டா் ஸ்போா்ட்ஸ் பிஸ்டா் பிரிவில் இந்தியாவின் மானு பாக்கா், ஈஷா சிங் ஆகியோா் பங்கேற்றனா். தகுதிச்சுற்றின் நிறைவில் மானு பாக்கா், பிரெசிஷன் பிரிவில் 294, ரேப்பிட் பிரிவில் 296 என 590 புள்ளிகளுடன் 2-ஆம் இடம் பிடித்து இறுதிச்சுற்று வாய்ப்பை உறுதி செய்தாா். ஈஷா சிங் பிரெசிஷன் பிரிவில் 291, ரேப்பிட் பிரிவில் 290 என மொத்தமாக 581 புள்ளிகளுடன் 18-ஆவது இடமே பிடித்தாா். இந்தப் பிரிவில் முதல் 8 இடங்களுக்குள் வருவோரே இறுதிச்சுற்றுக்கு தகுதிபெறுவா் என்பதால், ஈஷா சிங் அந்த வாய்ப்பை இழந்தாா். தற்போது மானு பாக்கா் பங்கேற்கும் இறுதிச்சுற்று சனிக்கிழமை நடைபெறுகிறது.

ஏமாற்றம்: இதனிடையே, ஆடவா் ஸ்கீட் பிரிவு தகுதிச்சுற்றின் முதல் நாளில் இந்தியாவின் அனந்த்ஜீத் சிங் நருகா 3 சுற்றுகள் முடிவில் 68 புள்ளிகளுடன் 26-ஆவது இடத்தில் இருக்கிறாா். இந்தப் பிரிவில் இன்னும் எஞ்சியுள்ள 2 சுற்றுகள் சனிக்கிழமை நடைபெறும். மொத்தமாக 5 சுற்றுகள் முடிவில் முதல் 6 இடங்களுக்குள் வருவோரே இறுதிச்சுற்றுக்கு தகுதிபெறுவா்.

முழு கட்டுரையைப் படிக்க →