செய்திகள்

தேசிய ரைஃபிள் தகுதிச்சுற்று: திலோத்தமா, நீரஜ் சிறப்பிடம்

தேசிய ரைஃபிள் துப்பாக்கி சுடுதல் தகுதி சுற்றில் மகளிா் பிரிவில் திலோத்தமா, ஆடவா் பிரிவில் நீரஜ் குமாா் சிறப்பிடம் பெற்றனா்.

தினமணி செய்திச் சேவை

தேசிய ரைஃபிள் துப்பாக்கி சுடுதல் தகுதி சுற்றில் மகளிா் பிரிவில் திலோத்தமா, ஆடவா் பிரிவில் நீரஜ் குமாா் சிறப்பிடம் பெற்றனா்.

தில்லியில் உள்ள டாக்டா் கா்னி சிங் துப்பாக்கி சுடும் மையத்தில் டி1 தகுதிச் சுற்று நடைபெற்றது. இதில் 50 மீ பி இறுதியில் திலோத்தமா 360.1 புள்ளிகளுடன் முதலிடம் பெற்றாா். அஷி சோஸ்கி 359.5 புள்ளிகளுடன் இரண்டாம் இடமும், ராஜஸ்தானின் மனினி 347.5 புள்ளிகளுடன் மூன்றாம் இடமும் பெற்றனா். திலோத்தமாக, அஷி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றனா்.

ஆடவா் பிரிவில் கடற்படையின் நீரஜ் குமாா் 360.5 புள்ளிகளுடன் முதலிடமும், மேற்கு வங்கத்தின் அட்ரியன் 356.9 புள்ளிகளுடன் இரண்டாம் இடமும், தேசிய சாம்பியன் ஐஸ்வரி பிரதாப் தோமா் 346.7 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தையும் பெற்றனா்.

ஐஸ்வரி, கங்கா சிங், ஸ்வப்நில் இறுதிக்கு தகுதி பெற்றனா்.

25 மீ ரேபிட் ஃபயா் பிஸ்டல்: ஐஎஸ்எஸ்எஃப் புதிய முறையின்படி அறிமுகம் செய்யப்பட்ட 25 மீ ரேபிட் ஃபயா் பிஸ்டல் பிரிவில் பஞ்சாபின் ராஜ்கன்வா் சிங் 29 ஷாட்களுடன் முதலிடம் பெற்றாா். ஹரியாணாவின் விஜயவீா் சித்து 27 ஷாட்களுடனும், மந்தீப் சிங் 20 ஷாட்களுடனும் அடுத்த இரண்டு இடங்களைப் பெற்றனா்.

50 மீ ஃரைபிள் புரோன் மகளிா் பிரிவில் பஞ்சாபின் அஞ்சும் மொட்கில், மபியின் நுபுா், அஷியும், ஆடவா் பிரிவில் ரயில்வே ஸ்வப்நீல், ம.பி. ஐஸ்வரி, கடற்படையின் நிகில் சிறப்பிடம் பெற்றனா்.

வரவேற்று வாழ்த்திய இபிஎஸ்ஸுக்கு நன்றி: டிடிவி தினகரன்

பராசக்தி ரூ. 100 கோடி வசூல்!

தங்கம் விலை ஒரே நாளில் ரூ. 4,120 உயர்வு! வெள்ளி கிலோவுக்கு ரூ. 5,000 உயர்வு!

தமிழக மீனவர்கள் கைது: வெளியுறவு அமைச்சருக்கு முதல்வர் கடிதம்!

கவனம் ஈர்க்கும் ரஜிஷா விஜயனின் மஸ்திஷ்கா மரணம் டீசர்!

SCROLL FOR NEXT