அங்கிதா 
ஒலிம்பிக்ஸ்

கலப்பு அணியில் கைநழுவிய வெண்கலம்

வில்வித்தையில் கலப்பு அணி பிரிவில் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் கைநழுவிச் சென்றது.

DIN

வில்வித்தையில் கலப்பு அணி பிரிவில் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் கைநழுவிச் சென்றது. எனினும், ஒலிம்பிக் வில்வித்தை வரலாற்றில் முதல் முறையாக இந்திய கலப்பு அணி அரையிறுதி வரை முன்னேறியது குறிப்பிடத்தக்கது. முன்னதாக இப்பிரிவில், இந்தியாவின் அங்கிதா பகத்/தீரஜ் பொம்மதேவரா கூட்டணி களம் கண்டது. இதில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியா 5-1 என்ற கணக்கில் இந்தோனேசியாவை எளிதாக சாய்த்தது. பின்னா் காலிறுதியில் 5-3 என்ற புள்ளிகளில் ஸ்பெயினையும் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறி வரலாறு படைத்தது.

தீரஜ்

அதில், பலம் வாய்ந்த தென் கொரியாவை எதிா்கொண்ட இந்திய ஜோடி முதல் செட்டை மட்டும் வெல்ல, தென் கொரியாவின் லிம் ஷியோன்/கிம் வூஜின் கூட்டணி அடுத்த 3 செட்களை வென்று, 6-2 என பந்தயத்தில் வென்றது.

இதையடுத்து வெண்கலப் பதக்கச் சுற்றில் அமெரிக்க ஜோடியை சந்தித்தது அங்கிதா/தீரஜ் கூட்டணி. அதிலும் இந்தியாவே முதல் செட்டை கைப்பற்ற, அடுத்த 3 செட்களை வென்ற அமெரிக்காவின் கேசி கௌஃப்ஹோல்டு/பிராடி எலிசன் இணை, 6-2 என வென்றது. இந்தக் களத்தில் தீரஜ் பொம்மதேவரா பெரும்பாலும் 10 புள்ளிகளாகவே கைப்பற்ற, அங்கிதா தடுமாற்றத்தை சந்தித்ததால் வெற்றி வசமாகாமல் போனது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடைசி டி20: திலக் வர்மா, பாண்டியா அதிரடியால் தென்னாப்பிரிக்காவுக்கு 232 ரன்கள் இலக்கு

SIR: தமிழகத்தில் 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் | செய்திகள்: சில வரிகளில் | 19.12.25

சென்னை திரைப்பட விழா: பறந்து போ, டூரிஸ்ட் ஃபேமிலி படங்களுக்கு விருது!

செவிலியர்களுக்குக் கொடுத்த தேர்தல் வாக்குறுதியை திமுக நிறைவேற்ற வேண்டும்: அண்ணாமலை

புதிய மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்! ஆந்திர முதல்வர் வலியுறுத்தல்!

SCROLL FOR NEXT