பாரீஸ் ஒலிம்பிக்: ஓட்டப்பந்தயத்தில் கிரண் பஹல் தோல்வி
பாரீஸ் ஒலிம்பிக் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீராங்கனை கிரண் பஹல் தோல்வி அடைந்தார்.
பாரீஸ் ஒலிம்பிக் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீராங்கனை கிரண் பஹல் தோல்வி அடைந்தார்.
2024 பாரீஸ் ஒலிம்பித் தொடரின் பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தின் காலிறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை கிரண் பஹல் பங்கேற்றார். (இன்று அவர் தனது 24வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்)
இதில், நிர்ணயிக்கப்பட்ட தூரத்தை 52.51 விநாடிகளில் கடந்து 7வது இடத்தைப் பிடித்தார் கிரண் பஹல். இது அவரின் முந்தைய சிறந்த ஆட்டத்தை (50.92 விநாடிகள்) விட பின்த்ங்கியதாகவே அமைந்தது.
டொமினிக் குடியரசு நாட்டைச் சேர்ந்த பெளலினோ 49.42 விநாடிகளில் கடந்து முதலிடத்தைப் பிடித்தார்.
முதல் ஆறு இடங்களைப் பிடித்த வீராங்கனைகள் மட்டுமே அரையிறுதிச் சுற்றுக்குத் தகுதியுடையவர்கள் என்பதால், காலிறுதிப் போட்டியுடன் வெளியேறினார் இந்திய வீராங்கனை கிரண் பஹல்.
இதனையடுத்து நாளை (ஆக. 6) நடைபெறவுள்ள தொடர் ஓட்டத்தில் அவர் பங்கேற்கவுள்ளார்.