பாட்மின்டன் வீராங்கனை பிவி சிந்து இந்தியாவிலேயே முதல் வீராங்கனையாக 500 போட்டிகளில் வென்று சாதனை படைத்துள்ளார்.
உலக அளவில் பிவி சிந்து ஆறாவது வீராங்கனையாக இந்த மைல்கல்லை எட்டி சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
500 வெற்றிகள் பெற்ற முதல் இந்திய வீராங்கனை
இந்தோனோசியா மாஸ்டர்ஸ் சூப்பர் 500 தொடரில் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் டென்மார்கின் க்ஜேர்ஸ்ஃபெல்ட் உடன் பிவி சிந்து மோதினார்.
சுமார் 43 நிமிஷங்கள் நடைபெற்ற இந்தப் போட்டியில் 21-19, 21-18 என்ற கேம் கணக்கில் டென்மார்க் வீராங்கனையை பிவி சிந்து வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
2020ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற சீன வீராங்கனை சென் யூஃபி உடன் காலிறுதியில் மோதுகிறார்.
பிவி சிந்து தான் விளையாடிய 732 மகளிர் ஒற்றையர் பிரிவு போட்டிகளில் 500-ஆவது வெற்றியைப் பெற்றுள்ளார்.
இந்த வரலாற்றுச் சாதனைக்கு தெலங்கானா முதல்வர் மற்றும் விளையாட்டு வீரர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
தெலங்கானா முதல்வர் வாழ்த்து
தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கூறியதாக சிஎம்ஓ தெலங்கானா தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
பிவி சிந்துவின் வரலாற்றுச் சாதனைக்கு தெலங்கானா முதல்வர் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறார்.
பிவி சிந்துவின் விடாது தொடர்கிற அர்ப்பணிப்பு, விடாமுயற்சி, இந்திய பாட்மின்டனில் அவரது வியக்கத்தக்க பங்களிப்பு, நாட்டிற்கே பெருமைச் சேர்க்கும் விதமாக இருப்பதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.
பிவி சிந்துவின் வெற்றி தொடரட்டும் என்றும் அவரது விளையாட்டுப் பயணத்தில் மேலும் பல சாதனைகள் பெறவும் முதல்வர் வாழ்த்தியுள்ளார் எனக் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.